வீட்டுத் தோட்டம் டிப்ஸ் ..!
வீட்டுத் தோட்டம் டிப்ஸ் :- வீட்டில் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டுமா ? அப்படினா என்னென்ன செடிகளை நம் தோட்டத்தில் வைப்பது என்று பார்ப்போம். நாம் தோட்டம் அமைக்க போகிறோம் என்றால் முதலில் நமக்கு சமையலறைக்கு தேவைப்படும் செடிகளை தோட்டத்தில் பயிரிடுவது மிகவும் நல்லது. அதை விட்டுட்டு தேவையற்ற செடிகளை விதைத்து அவற்றை பராமரிப்பது அவசியமற்ற செயலாகும்.
தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..! – பகுதி – 2
சரி வாங்க நம் தோட்டத்தில் என்னென்ன செடிகளை நடுவது என்று இவற்றில் காண்போம்.
வீட்டு தோட்டம் டிப்ஸ் – புதினா இலை:
சமையலுக்கு அதிகமாக பயன்படுத்த கூடிய ஒரு தாவரம் என்றால் அது புதினா.
புதினா சைவம் மற்றும் அசைவம் என்று இரண்டிலும் அதிகமாக பயன்படுத்த கூடிய ஒரு கீரையாகும்.
இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
இந்த புதினாவை கடைகளுக்கு சென்று வாங்குவதற்கு பதிலாக நம் தோட்டத்தில் விதைத்தால் மிகவும் நன்மையாகும்.
வீட்டுத்தோட்டம் டிப்ஸ் – இரசாயனம் இல்லாத காய்கறிகள் கிடைக்க:
இப்போதெல்லாம் அதிக மகசூல் பெறவேண்டும் என்பதற்காக விவசாயிகள் அதிகமாக நடவு செய்யும் பயிர்களுக்கு இரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
எனவே நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சிலவகையான பொருட்களை நம் தோட்டத்தில் அமைத்து நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
வீட்டுதோட்டம் டிப்ஸ் – சிக்கனத்தை கடைபிடிக்கலாம்:
சிலவகை விதைகளை கடையில் இருந்து வாங்கி வந்து நம் தோட்டத்தில் வளர்க்கலாம். இதற்கு அதிக செலவாகாது.
தினமும் தேவையான அளவு தண்ணீர் தெளித்தாலே போதும் அதிக மகசூல் கிடைக்கும். இதன் மூலம் அதிக வருமானமும் கிடைக்கும்.
காய்கறிகளுக்காக சந்தையில் செலவழிக்கும் பணத்தையும் சேமிக்கலாம். ஆரோக்கியமாகவும் வாழலாம்.
வீட்டுத்தோட்டம் டிப்ஸ் – ஆரோக்கியமாக வாழ:
நீங்கள் துளசி, புதினா போன்ற செடிகளை உங்களது தோட்டத்தில் வளர்த்து அந்த இலைகளை சிறிதளவு தினமும் பறித்து சாப்பிட்டால் அதிக ஆரோக்கியம் கிடைக்கும்.
அல்லது டீ-யில் சேர்த்து குடித்து வரலாம் இதன் மூலமாகவும் அதிக ஆரோக்கியம் கிடைக்கும்.
இவற்றில் இருக்கும் மருத்துவ குணத்தால் சுவாச பிரச்சனைகள், பல் பிரச்சனை, ஆஸ்துமா, நுரையிரல் கோளாறுகள், இதய நோய் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வீட்டுதோட்டம் டிப்ஸ் – இயற்கையான சூழல்:
தோட்டம் அமைப்பது உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைத்து, உங்களுக்கு அமைதியையும் ஓய்வையும் தரக்கூடியது.
இயற்கை சூழலில் இருப்பது உங்கள் உடல், மன ஆரோக்கியத்திற்கு நல்லதாகவும், உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..!
வீட்டு தோட்டம் டிப்ஸ் – கொசு விரட்டியாகவும் இருக்கிறது:
உங்களது தோட்டத்தில் செடிகளை அமைக்க மூலிகை செடிகளை தேர்வு செய்வது மிகவும் சரியான முடிவாகும்.
இதன் மூலம் கொசுவைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் கொசுக்கடி, மலேரியா, டெங்கு போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
குறிப்பாக துலுக்க செவ்வந்தி பூ செடியை உங்களது தோட்டத்தில் வைத்தால் மிகவும் நல்லது. இது ஒரு சிறந்த கொசுவிரட்டியாக விளங்குகிறது.
எனவே ஒவ்வொரு செடிகளுக்கு மத்தியிலும் ஒரு சாமந்தி செடி இருந்தால் போதும். இதன் அழகான மலர்கள் உங்கள் தோட்டத்தை மிக அழகாக விளங்க செய்யும்.
வீட்டுதோட்டம் டிப்ஸ் – மனதிற்கு அமைதியை தரும்:
தோட்டம் அமைப்பது மிகவும் கடினமான விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் நீங்கள் தோட்டம் அமைக்க ஆரமித்துவிட்டீர்கள் என்றால் அதன் உணர்வு உங்களுக்கே நன்றாக விளங்கும். ஒவ்வொரு சிறிய செடி, கிளை அல்லது பூவும் உங்களுக்கு ஒரு நல்ல மன அமைதியை தரும் என்பதில் ஆச்சரியமில்லை.
உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.