விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள் | Agriculture scheme

Advertisement

விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள் | Agriculture scheme

Agriculture scheme:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் விவசாயிகளுக்கான சிறந்த 6 பயனுள்ள நல திட்டங்களை மத்திய அரசு விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களை பற்றி இன்னும் சிலருக்கு தெரியாமலேயே இருக்கின்றன. எனவே இந்த பதிவில் விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் 6 நல திட்டங்களை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நவீன விவசாய கருவிகள் பெயர்கள்..!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

pm kisan samman nidhi

இந்த பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் 2019 பிப்ரவரி, 24ல் செயல்படுத்தப்பட்டது. 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் ரூ.6,000/- நிதி உதவி இத்திட்டத்தில் பெறலாம்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் ரூ.2000/- வீதம் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இத்திட்டம் சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்படுகிறது.

ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்ட நபர்களான அரசு பென்ஷன் பெறுவோர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள், அரசியல்வாதி ஆகியவர்கள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா

pradhan mantri jeevan jyoti bima yojana scheme

பிரதமர் ஜீவன்ஜோதி பீமா யோஜனா என்பது உயிர்க்காப்பீடு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் உயிர்காப்பீடு செய்யலாம். சம்மான் நிதியிலிருந்து அதாவது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இருந்து  பெறப்பட்ட தொகையில் இருந்து ரூ.330 வீதம் ஆண்டுக்கு தனிநபர் உயிர் காப்பீடு செய்யலாம்.

இதற்கான வயது தகுதி 18 வயது முதல் 50 வயது வரை உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 50 வயது நிறைவடைவதற்கு முன்பு இத்திட்டத்தில் சேர்ந்து தொடர்ந்து பிரிமியம் செலுத்திவந்தால் 55 வயது வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

pradhan mantri suraksha bima yojana

பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா என்பது விபத்துக்காப்பீடு திட்டமாகும். ஏதாவது விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது உடல் ஊனத்திற்காக வழங்கப்படும் ஒரு காப்பீடு திட்டமாகும். இத்திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை ஆண்டுக்கு ரூ.12 மட்டும் பிரிமியம் செலுத்தி விபத்துக்காப்பீடு பெறலாம். விபத்து, பாம்புக்கடி, இயற்கை சீற்றம் என விபத்தின் தன்மைக்கு ஏற்ப அதிக பட்சம் ரூ.2,00,000/- வரை காப்பீடு பெற இயலும்.

சிறு குறு விவசாய கருவிகள் மானியம்

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா  / (Pradhan Mantri Fasal Bima Yojana)

Pradhan Mantri Fasal Bima Yojana

இது ஒரு பயிர் காப்பீடு திட்டமாகும், ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப (காரிப், ராபி) பயிர் காப்பீட்டு தொகையில்  2 சதவீதம் பிரிமியம் செலுத்தினால் போதுமானது. பயிர் இழப்பு, வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற பாதிப்புகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை கிடைக்கும். இ-சேவை மையங்களில் நிலத்தின் அடங்கல், வங்கி கணக்கு எண்ணுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா

Pradhan Mantri Jan Dhan Yojana

இது ஒரு விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டமாகும். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 18 வயதிற்கு ரூ.55 செலுத்த வேண்டும். பிரிமியம் தொகையை காலாண்டு, மாதம், அரையாண்டு என வசதிக்கு ஏற்ப செலுத்தலாம். இதில் 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூ.3,000/- ஓய்வூதியம் பெறலாம். இத்திட்டம் எல்.ஐ.சி., நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. பங்களிப்பு முறையில் ஓய்வூதியத் திட்டத்தில் வயதுக்கு ஏற்ப பிரிமியம் தொகை வசூலிக்கப்படும்.

விவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள்..!

கால்நடை காப்பீடு

livestock insurance scheme

பயிர்களுக்கு இருப்பது போல் கால்நடைகளுக்கும் காப்பீடு உள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோய்யுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பிரதமரின் கவுரவ சம்மான் நிதியில் இருந்து காப்பீட்டு திட்டங்களுக்கு பிரிமியம் செலுத்தி வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்பெறும் வகையில் உதவிடலாம்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil
Advertisement