சிறு குறு விவசாய கருவிகள் மானியம் | Vivasaya maniyam | Agriculture subsidy..!

Advertisement

சிறு குறு விவசாய கருவிகள் மானியம் | Vivasaya maniyam | Agriculture subsidy

சிறு குறு விவசாய கருவிகள் மானியம்:- வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்க வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் விவசாய்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டமானது வேளாண் பொறியியல்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது இத்திட்டத்தின்கீழ் நெல், நாற்று நடவு இயந்திரம், பவர்டில்லர், சுழற் கலப்பை, குழிதோண்டும் கருவி, பல்வகை பயிர் கதிரடிக்கும் இயந்திரம், தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான், தென்னை மரம் ஏறும் கருவி, டிராக்டர் மற்றும் பவர்டில்லர் ஆகிவற்றால் இயக்கப்படும் இதர வேளாண்மை கருவிகள், இயந்திரங்கள் மானியம் (Agriculture subsidy) விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து மானிய உதவியுடன் வாங்கி கொள்ளலாம்.

நவீன விவசாய கருவிகள் பெயர்கள்..!

சிறு குறு விவசாய கருவிகள் மானியம் பெற தேவைப்படும் ஆவணங்கள்:

சிறு குறு விவசாய கருவிகள் மானியம் (Agriculture subsidy) பெற தேவையான விண்ணப்பம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கிடைக்கின்றது.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் 2 பாஸ்பேர்ட் புகைப்படம், ஆதார் அட்டையின் நகல், சிட்டா அடங்கல் நகல், புல வரைபட நகல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, சாதிச்சான்றின் நகல், டிராக்டரில் இயங்கக்கூடிய கருவிகளாக இருப்பின் டிராக்டரின் பதிவு சான்றின் நகல் ஆகியவற்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

Agriculture subsidy – மானியம் வழங்கும் முறைகள்:

விவசாயிகள் அளிக்கும் அனைத்து விபரங்களும் வேளாண்மை பொறியியல் துறையின் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு மானியம் வழங்கப்படும்.

வேளாண் பொறியியல் துறையின் அனுமதி கடிதம்  கிடைத்தவுடன் தேர்வு செய்த கருவிகள், வேளாண் இயந்திரங்களின் முழுத்தொகையும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வரைவோலை மூலமாக வழங்க வேண்டும்.

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை பெற்ற பின் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் உறுதி செய்து அதற்குரிய மானியத் தொகையை விவசாயிகளின் (Agriculture subsidy) வங்கியின் கணக்கில் செலுத்துவார்கள்.

எனவேமானிய விலையில் கருவி, இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையில் பதிவு செய்து இத்திட்டத்தின்  மூலம் பயன் பெறலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற, முதலில் விவசாயிகள், தமிழக அரசின் உழவன் செயலியில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அவரது விண்ணப்பம் மத்திய அரசின் www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் இணைக்கப்படும்.

வேளாண் இயந்திரத்தின் பெயர் மானியம் (ரூபாய் இலட்சத்தில்)
ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறு, குறு பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம்  இதர விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 
டிராக்டர் (8 முதல் 15 ஹெச்.பி வரை மற்றும் 15 முதல் 20 ஹெச்.பி வரை) ரூ.1,00,000/- ரூ.75,000/-
டிராக்டர் (20 முதல் 40 ஹெச்.பி வரை மற்றும் 40 முதல் 70 ஹெச்.பி வரை) ரூ.1,25,000/- ரூ.1,00,000/-
பவர் டில்லர் (8 ஹெச்.பி-க்கு கீழ்) ரூ.50,000/- ரூ.40,000/-
பவர் டில்லர் (8 ஹெச்.பி-க்கு மற்றும் அதற்கும் மேல்) ரூ.75,000/- ரூ.60,000/-
நெல் நாற்று நடவு செய்யும் கருவி (4 வரிசை) ரூ.94,000/- ரூ.75,000/-
நெல் நாற்று நடவு செய்யும் கருவி (4 வரிசைக்கும் மேல்) ரூ.2,00,000/- ரூ.2,00,000/-
சுழற்கலப்பை (ரோட்டோ வேட்டர்) ரூ.63,000/- ரூ.50,000/-
விதை விதைக்கும் கருவி, உரமிடும் உழவில்லா விதைப்புக் கருவி, உரத்துடன் விதை விதைக்கும் கருவி ரூ.44,000/- ரூ.35,000/-
டிராக்டரால் இயங்கக்கூடிய வரப்பு அமைக்கும் கருவி ரூ.63,000/- ரூ.50,000/-
டிராக்டரால் இயங்கும் வைக்கோல் கட்டு கட்டும் கருவி ரூ.63,000/- ரூ.50,000/-
புதர் அகற்றும் கருவி ரூ.25,000/- ரூ.20,000/-
நெற்பயிரில் களையெடுக்கும் கருவியினை உள்ளடக்கிய விசை களையெடுக்கும் கருவி ரூ.19,000/- ரூ.15,000/-
தட்டை வெட்டும் கருவி (3 ஹெச்.பிக்கும் குறைவான இயந்திரம் / மின்மோட்டாரினால் இயங்க கூடியது மற்றும் 20 ஹெச்.பிக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர் டிரில்லரால் இயங்கும்) ரூ.20,000/- ரூ.16,000/-
தட்டை வெட்டும் கருவி (3 ஹெச்.பிக்கும் மேல் 5 ஹெச்.பிக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர் டிரில்லரால் இயங்கும்) ரூ.25,000/- ரூ.20,000/-
விசைத் தெளிப்பான் ரூ.10,000/- ரூ.8,000/-
டிராக்டரால் இயங்கக்கூடிய பூம் விசைத் தெளிப்பான்கள் ரூ.63,000/- ரூ.50,000/-

வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வாங்கும் மையங்களை ஏற்படுத்துதல்:-

வட்டார அளவிலான ரூ.25.00 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் / கருவிகளைக் கொண்ட வடக்கை மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர், விவசாயிகள், விவசாயக்குக்களுக்கு 40% (அதிகபட்சமாக 10,00,000 வரை) மானியம் வழங்கப்படுகிறது.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil
Advertisement