Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! உங்கள் வீட்டில் கற்றாழை செடி இருக்கிறதா..? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. இது என்ன பதிவு என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். பொதுவாக நம்மில் பலருக்கும் வீட்டை சுற்றி அழகழகான செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தான் இன்றைய நிலையில் பலரும் வீட்டு மாடியில் மாடித்தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்து வருகிறார்கள். அப்படி நம்மில் பலருக்கும் வீட்டில் கற்றாழை செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் இந்த பதிவில் இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடியை நன்றாக வளர செய்யும் கரைசல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
கற்றாழை செடி நன்றாக வளர கரைசல்:
பொதுவாக அனைவருமே வீட்டில் கற்றாழை செடி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். காரணம் இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதிலும் இது சருமத்திற்கும், முடிக்கும் அதிகமாகவே பயன்படுகிறது. அதனாலேயே அனைவரும் இந்த கற்றாழை செடியை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அதுபோல இந்த கற்றாழை செடி அனைவரின் வீடுகளிலும் நன்றாக வளரும் என்று சொல்லிவிட முடியாது. சிலரது வீடுகளில் மட்டும் தான் கற்றாழை செடி நன்றாக வளரும். சில வீடுகளில் வளராது. அதுவும் இந்த வெயில் காலத்தில் சொல்லவே வேண்டாம். கற்றாழை செடி ஈரப்பதம் உள்ள இடத்தில் தான் நன்றாக வளரும். வெயில் நேரங்களில் இது பட்டுபோய் விடுகிறது. சரி கற்றாழை செடியை நன்றாக வளர செய்யும் கரைசல் செய்வதை பற்றி இங்கு காண்போம்.
வீட்டிலேயே வேகமாக கற்றாழையை வளர்ப்பது எப்படி |
- வாழைப்பழ தோல்
- முட்டை ஓடு
- உருளைக்கிழங்கு தோல்
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் வாழைப்பழத் தோலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து உருளைக்கிழங்கு தோலையும், அதேபோல முட்டை ஓட்டையும் சேர்த்து கொள்ளவும்.
அவ்வளவு தான் அதில் 3 கப் அல்லது தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். இதை மூடி போட்டு 3 நாட்கள் வரை அப்படியே வைக்க வேண்டும். பின் 3 நாட்கள் கழித்து அந்த நீரை வடிகட்டி கற்றாழை செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.
இதுபோல வாரத்திற்கு 2 அல்லது முறை செய்து வந்தால் கற்றாழை செடி நன்றாகவும் செழிப்பாகவும் வளரும்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |