Arali Poo Chedi Valarpathu Eppadi
பொதுவாக பூச்செடிகளை பொறுத்தவரை செம்பருத்தி, ரோஜா, மல்லிகை பூ, செவ்வந்தி, முல்லை, சாமந்தி பூச்செடி என பல வகைகள் இருக்கிறது. இதன் படி பார்த்தால் அனைத்து பூச்செடிகளையும் ஒரே வீட்டில் வளர்ப்பது என்பது மிகவும் குறைவான ஒன்று தான். ஏனென்றால் ஒவ்வொன்றையும் நாம் சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே இவற்றை எல்லாம் செய்ய முடியும். அதேபோல் பூக்களை பொறுத்தவரை எல்லா வகையான பூக்களையும் நாம் தலையில் அணிவது கிடையாது.
ஏனென்றால் சில பூக்களை மட்டும் தான் நாம் தலையில் வைத்து கொள்கிறோம். அதேபோல் தெய்வங்களுக்கு வைத்து பூஜை செய்யும் பூக்கள் என்றும் சிலவற்றை இருக்கிறது. இதன் படி பார்த்தால் அரளி, செவ்வந்தி, செம்பருத்தி ஆகிய பூக்கள் பெரும்பாலும் கடவுளுக்கு சூட்டக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. மேலும் இத்தகைய பூக்களை சந்தைகளிலும் விற்பனை செய்வார்கள். எனவே அரளி பூச்செடி வீட்டிலேயே எப்படி வளர்ப்பது என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அரளி பூச்செடி வளர்ப்பது எப்படி..?
அரளி பூச்செடியை பொறுத்தவரை அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. ஆகையால் வாரம் 2 முறை மட்டுமே தண்ணீர் ஊற்றினால் போதும். அதேபோல் அதில் அரளி செடியில் புதிய கிளைகள் வைத்தால் அதனையும் நறுக்கி விடுங்கள்.
ஏனென்றால் அப்போது தான் செடி நன்றாக செழிப்பாக வளரும் மேலும் பூக்களும் நிறைய பூக்க ஆரம்பிக்கும்.
மண் கலவை:
அரளி பூவினை உங்களுடைய வீட்டில் நடவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு மண் கலவை என்பது அவசியம் கிடையாது. உங்களுடைய வீட்டில் இருக்கும் மண்ணிலேயே இந்த செடியினை வளர்க்கலாம்.
உரமிடும் முறை:
இந்த செடிக்கு மற்ற செடியை போல அதிகமாக உரம் கொடுக்க வேண்டிய அவசியம். அதனால் பழக்கழிவுகள், அரிசி தண்ணீர் மற்றும் காய்கறி கழிவுகள் என இவற்றை மட்டுமே நீங்கள் உரமாக கொடுத்தால் போதுமானது.
குறிப்பாக இந்த செடியை வெயில் அதிகமாக இருக்கும் இடத்தில் நட்டு வைத்தால் தான் செடி செழிப்பாக வளரும்.
மேலும் வேண்டும் என்றால் மண்புழு உரத்தைனையும் இந்த செடிகளுக்கு கொடுக்கலாம். இவற்றை மட்டுமே நீங்கள் உரமாக கொடுத்தால் போதும் அரளி பூச்செடி வேகமாக மற்றும் பூக்களும் அதிகமாக பூக்கும்.
பூக்கள் அதிகம் பூக்க டிப்ஸ்:
பூக்கள் அதிகமாக பூக்க ஆரம்பித்த உடன் நீங்கள் வாரம் 3 முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் அளிக்கும் விதத்தை வைத்தும் அரளி பூ அதிகமாக பூக்க ஆரம்பிக்கும்.
மல்லி பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க இந்த தண்ணீரை ஊற்றினால் போதுமா
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |