செடி அவரை கொத்து கொத்தாய் காய்க்க இதை செய்ய மறக்காதீர்கள்..!

Advertisement

Avarai Sedi Valarpu in Tamil

அனைவருமே வீட்டில் பலவிதமான காய்கறி செடிகளை வளர்த்து வருவோம். ஒரு சில செடிகள் நன்றாக வளரும். ஒரு சில செடிகள் அதற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கமால் வளராமலே இருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் எந்த செடிக்கு என்ன வகையான ஊட்டச்சத்து தேவை என்பதை அறிந்து அதற்கேற்றவாறு உரத்தினை அளிக்க வேண்டும். எனவே அந்த வகையில் நீங்கள் உங்கள் வீட்டில் அவரை செடி வளர்த்து வந்தால், அவரை கொத்து கொத்தாய் காய்க்க இந்த உரத்தினை போடுங்கள்..

அவரை செடி  அதிகமாக காய்க்க வழிமுறைகள்:

Avarai Sedi Valarpu in Tamil

அவரை செடி வைக்கும் போது அதற்கு தகுந்த மண்கலவையை இட வேண்டும். அதாவது 1 பங்கு உரம், இரண்டு பங்கு மண், ஒரு பங்கு தேங்காய் நார் மற்றும் சிறிய அளவில் கடலைபுண்ணாக்கு சேர்த்து மண் கலவை இட வேண்டும்.

அடுத்து, அவரை செடியை பொறுத்தவரை வைத்த 45 வது நாட்களிலே பூ வைத்து காய்க்க தொடங்கி விடும். எனவே, அவரை செடி வைத்த 40 வது நாளிலே அதற்கு முக்கியமான ஒரு பொருளை உரமாக இட வேண்டும். அது வேறொன்றுமில்லை பெருங்காயம் தான். பெருங்காயம் செடிக்கு ஊட்டச்சத்தினை அளித்து நோய் தாக்குதல் இல்லாமல் வளர செய்ய உதவுகிறது. எனவே 40 வது நாளில் அவரை செடியில் பெருங்காயத்தினை புதைத்து வைக்க வேண்டும். 

அதன் பிறகு, அவரை செடியில் பூக்கள் உதிராமல் காய்கள் வைக்க பெருங்காயத்தை மோர் கரைசலில் கலந்து செடியில் தெளிக்க வேண்டும். 

அவரை செடியில் பூச்சு தாக்குதல் இருப்பதை நீங்கள் அறிந்தால் உடனே அதற்கு வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்க வேண்டும்.

உங்க வீட்டு கத்தரிக்காய் செடி வருடம் முழுவதும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு பொருள் போதும்..!

அவரை செடி காய்க்க தொடங்கியதும் அதற்கு கண்டிப்பாக ஒரு உரக்கரைசலை இட வேண்டும். அதாவது ஒரு வாளி தண்ணீரில் வேப்ப புண்ணாக்கையும் கடலை புண்ணாக்கையும் நன்றாக ஊறவைக்க வேண்டும். பிறகு அதனை கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அவரை செடிக்கு இட வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், அவரை செடியில் ஏதேனும் பழுத்த இலைகள் இருந்தால் அதனை உடனே நீக்கி விட வேண்டும்.

மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளை எல்லாம் நீங்கள் அவரை செடிக்கு கொடுத்து வந்தால் அவரை செடி கொத்து கொத்தாய் காய்களை தரும்.

7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement