வாழைத்தார் பெருக்க | Banana Bunch Feeding in Tamil
பொதுவாக அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக உள்ள ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழத்திற்க்கு என்று தனி சிறப்புகள் உள்ளது. இத்தகைய வாழைப்பழத்தில் செவ்வாழை, பூவம் பழம், கற்பூரவள்ளி மற்றும் பச்சை வாழைப்பழம் என பல வகைகள் இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் பெரும்பாலன வீடுகளேயே வாழை மரம் வளர்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பூவம் வாழை மரத்தினை அதிகமாக வளர்த்து வருவார்கள். நாம் வாழைமரக் கன்றினை சிறியதில் இருந்து பார்த்து பார்த்து நிறைய ஊட்டச்சத்துக்களை போட்டு வளர்த்து வருவோம். ஆனால் பெரிதாக மரம் வளர்ந்த பிறகு அதில் வைக்கும் வாழைக்குலை மட்டும் மிகவும் சிறியதாக காணப்படும். இந்த பிரச்சனை பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது. ஆகையால் இத்தகைய பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் விதமாக இன்று வாழைமரத்தில் வைக்கும் வாழைத்தார் பெருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
செடி முருங்கைக்கு இந்த ஒரு கரைசலை கொடுங்கள்.. தாறுமாறாக காய்கள் காய்க்கும்
Banana Bunch Feeding:
உங்களுடைய வீட்டில் வாழை மரம் இருந்தால் அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதன் பிறகு வாழை மரம் மரத்திற்கு சரியான அளவில் தண்ணீர் மற்றும் உரங்களை அளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து முடித்த பிறகு நீங்கள் நடவு செய்த வாழைமரம் 3 மாதத்திற்கு பிறகு குலைகள் விட ஆரம்பித்து விடும். இப்போது இத்தகைய குலைகள் பெரிதாக வளர்வதற்கு சில முறைகளை பின்பற்ற வேண்டும்.
வாழை குலை பெருக்க:
- யூரியா- 7.5 கிராம்
- சல்பேட் பொட்டாசியம்- 7.5 கிராம்
- மாட்டுச்சாணம்- 500 கிராம்
- தண்ணீர்- 100 மில்லி
ஊட்டச்சத்து தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பெரிய வாலியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த வாலியில் யூரியா மற்றும் பொட்டாசியத்தை சேர்த்து சிறிது நேரம் கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வாலியில் உள்ள பொருளுடன் எடுத்துவைத்துள்ள மாட்டுச்சாணம் மற்றும் தண்ணீரை அதில் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். இப்போது ஊட்டச்சத்துக் கரைசல் தயார்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்து வைத்துள்ள ஊட்டச்சத்து கரைசலை ஒரு பாலீத்தீன் கவற்றில் ஊற்றி பின்பு அந்த கவரை வாழைக்குலையின் நுனியில் சணலால் கட்டி வைத்து விடுங்கள்.
15 நாட்கள் கழித்த பிறகு இந்த கவரை மரத்தில் இருந்து வெளியேற்றி விடுங்கள். இத்தகைய முறையினை பின்பற்றுவதன் மூலம் 15 நாட்கள் கழித்து 10 செ.மீ முதல் 12 செ.மீ வரை நீளமாக வளர்ந்து இருக்கும்.
மற்றொரு டிப்ஸ்:
இந்த ஊட்டச்சத்து கரைசல் முறையினை நீங்கள் பின்பற்றினாலும் கூட வாழைக்குலையின் நுனியில் உள்ள சூழ்முடியினை நாம் கிள்ளி விடுவதன் மூலம் வாழைத்தார் நன்றாக பெரிதாக வளரும்.
மாமரத்தில் பூ வைக்க வில்லையா.. அப்போ இதை மட்டும் மாமரத்திற்கு போடுங்கள்.. தாறுமாறாக பூ வைக்கும்…
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |