வாழை மரம் வளர்ப்பது எப்படி..?
பொதுவாக நம்முடைய வீட்டில் எத்தனையோ மரங்கள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் எப்போதும் பலன் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்காது. இதனுடன் ஒப்பிட்டு பார்க்கையில் வாழைமரம் அப்படி கிடையாது. ஏனென்றால் வாழை மரத்தில் வாழை இலை, வாழை தண்டு, வாழைப்பூ மற்றும் வாழைக்காய் என இவ்வாறு எல்லாம் பல முறையில் பயனளித்து வருகிறது. ஆகவே வாழைமரத்தினை ஒவ்வொரு வீட்டிலும் வளர்ப்பது என்பது நமக்கு அதிகப்படியான பலனை அளிக்கக்கூடிய ஒன்ராகவே இருக்கிறது. அதனால் வீட்டில் வாழைமரம் செழிப்பாக வளர்ந்து அதிகமாக குலை வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாழைமரம் நடவு முறை:
வாழைமரத்தினை பொறுத்தவரை போதுமான அளவு வெயில் இருக்க வேண்டும். ஆகையால் அதற்கு ஏற்ற மாதிரியான இடத்தில் வாழை மரத்தினை நடவு செய்ய வேண்டும். மேலும் உங்களது வாழைமரத்திற்கு போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம்.
அதனால் இவை இரண்டினையும் சரியான முறையில் செய்ய வேண்டும்.
உரம் மிடுதல்:
காய்கறிக கழிவுகள், பழக்கழிவுகள், மண்புழு உரம் என இத்தகைய உரங்களை எல்லாம் வாழை மரத்திற்கு அளிக்க வேண்டும். இத்தகைய உரத்தின் மூலம் வாழைமரத்திற்கு கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் என இத்தகைய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
மேலும் மாட்டுச்சாணம் உரத்தினை செடியின் வேர்பகுதிகளில் போட வேண்டும். அதாவது ஒவ்வொரு வாழைமரத்திற்கும் குறைந்தபட்சம் 2 கைப்பிடி அளவாவது மாட்டுச்சாணம் உரம் போட வேண்டும்.
மாட்டுச்சாணத்தை நீங்கள் நன்றாக வெளியில் காய வைத்து விட்டு அதன் பிறகு அந்த சாணத்துடன் மண்புழு இருந்தால் அதனையும் நன்றாக கலந்த பிறகே வாழைமரத்திற்கு போட வேண்டும்.
இத்தகைய முறையினை எல்லாம் சரியாக பராமரித்தாலே வாழைமரம் செழிப்பாக வளர ஆரம்பிக்கும். மேலும் இதில் மூலமாக கிடைக்கும் சத்துக்கள் வழியாகவும், வாழை குலைகள் நன்றாக பெரியதாக இருக்கும்.
கருவேப்பிலை செடி செழிப்பாக வளர என்ன செய்யலாம்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |