Best Fertilizer for Coconut Tree in Tamil
பொதுவாக நமது இந்திய பாரம்பரிய உணவு முதல் மேலைநாட்டு உணவுமுறை வரை அனைத்திலும் மிக முக்கியமான மூலப்பொருளாக பயன்படுவது தேங்காய் தான். அப்படிப்பட்ட தேங்காயை நமக்கு அளிக்கும் தென்னை மரத்தை நாம் அனைவருமே நமது வீட்டில் வளர்ப்போம். ஆனால் ஒரு சிலரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் நீண்ட நாட்களாக தேங்காய் காய்க்காமல் இருக்கும். மேலும் ஒரு சிலரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் பாலைவிட்டு பூக்கள், குரும்பைகள் எல்லாம் வைக்கும். ஆனால் கொஞ்சம் நாள் கழித்து அவையாவும் மரத்திலிருந்து கீழே உதிர்ந்துவிடும். இப்படி உங்கள் வீட்டின் தென்னை மரத்தில் உள்ள பூக்கள், குரும்பைகள் அதிக அளவு கொட்டுகிறதா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இந்த பதிவில் இயற்கையான முறையில் உங்க வீட்டின் தென்னை மரத்தில் உள்ள பூக்கள், குரும்பைகள் அதிக அளவு கொட்டுவதை தடுத்து அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
பூக்காத செம்பருத்தி பூச்செடியில் கூட அதிக அளவு பூக்கள் போக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்
Homemade Fertilizer for Coconut Tree in Tamil:
இயற்கையான முறையில் உங்க வீட்டின் தென்னை மரத்தில் உள்ள பூக்கள், குரும்பைகள் அதிக அளவு கொட்டுவதை தடுத்து அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம் வாங்க.
முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- எருக்க இலை – 10 கிலோ
- நாட்டு சர்க்கரை – 1 கிலோ
- தண்ணீர் – 2 லீட்டர்
பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 10 கிலோ எருக்க இலையை சேர்த்து நன்கு அரைத்து விடுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கிலோ நாட்டு சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள்.
தண்ணீரை ஊற்றி கொள்ளவும்:
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 லீட்டர் தண்ணீரை ஊற்றி நன்கு மூடிபோட்டு மூடி நன்கு நிழல் பாங்கான இடத்தில் வைத்து கொள்ளுங்கள். இந்து முதல் பத்து நாட்கள் அப்படியே விடுங்கள்.
பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள்:
பின்னர் அதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் வடிகட்டி வைத்துள்ள கரைசலில் இருந்து 500 மி.லியை மட்டும் எடுத்து ஊற்றி கொள்ளுங்கள்.
அதனுடன் 10 லீட்டர் தண்ணீரை ஊற்றி உங்கள் தென்னை மரத்தின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை வாரம் இருமுறை என தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வீட்டின் தென்னை மரத்தில் உள்ள பூக்கள், குரும்பைகள் கொட்டுவதை தடுத்து அதிக அளவு காய்கள் காய்க்க உதவும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |