கருவேப்பிலை ஒன்று போதும்..! எந்த பூச்செடியாக இருந்தாலும் கிலோக்கணக்கில் பூக்கள் பூத்து குலுங்கும்..!

Advertisement

கருவேப்பிலை செடிகளுக்கான நல்ல இயற்கை உரம்

நாம் அனைவருமே வீட்டில் பூச்செடிகள், காய்கறி செடிகள் போன்றவற்றை வளர்த்து வருவோம். ஆனால், அவை வளர்வதற்கு தேவையான உரத்தினை அளித்திருக்க மாட்டோம். பொதுவாக செடிகள் மற்றும் மரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்று. எனவே அதனை நாம் செடிகளுக்கு கொடுப்பதன் மூலம் அதன் வளர்ச்சியை அதிகரித்து அதில் இருந்து அதிக மகசூலை பெற முடியும்.

எனவே, நீங்கள் வீடுகளில் எந்த வகையான பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகள் வளர்த்து வந்தாலும் அதில் அதிக பூக்கள் மற்றும் காய்கள் பறிக்க இந்த உரத்தினை மட்டும் போடுங்கள்.

What Are The Ingredients For Fertilizer in Tamil:

தேவையான பொருட்கள்:

  • காய்ந்த கருவேப்பிலை – 3 கைப்பிடி
  • வாழைப்பழத்தோல் – 10
  • டீத்தூள் – 3 ஸ்பூன் 
  • முட்டை ஓடு – 10

What To Do To Grow Plants in Tamil:

முதலில் காய்ந்த கருவேப்பிலை 2 கைப்பிடி அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து, 10 வாழைப்பழத்தின் தோலை சிறிது சிறிதாக வெட்டி நிழலில் வைத்து நன்கு காயவைத்து எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, 10 முட்டையின் ஓட்டை நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

 what are the ingredients for fertilizer in tamil

இப்போது, ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் காய்ந்த கருவேப்பிலை, காய்ந்த வாழைப்பழத்தோல், முட்டையின் ஊடு மற்றும் டீத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஜேட் செடி (லக்கி பிளாண்ட்) வீட்டில் வளர்ப்பது எப்படி.?

இந்த பொடியை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொண்டு, வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை உங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடி, மல்லிகை செடி, காய்கறி செடி அனைத்து செடிகளுக்கும் உரமாக கொடுங்கள்.

அதாவது, இந்த தயார் செய்து வைத்துள்ள பவுடரை 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து, செடியின் மண் பகுதியை கிளறி விட்டு போட வேண்டும். அதன் பிறகு மண்ணை கொண்டு மூடி விட வேண்டும்.

 what are the ingredients for fertilizer in tamil

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் செடி அதிகமாக பூக்க தொடங்கும்.

அதன் பிறகு, 15 நாட்களுக்கு ஒருமுறை தேமோர் கரைசல் கொடுத்து வர வேண்டும்.

கத்தரிக்காய் செடியில் பூக்கின்ற பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த உரத்தை மட்டும் கொடுங்கள்..!

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement