Brassica Flower Farmers In Tamil
தற்போது கோடைகாலம் வந்த நிலையில் விவசாயிகள் அரிசி சாகுபடியை விட மலர் சாகுபடி, சிறுதானிய சாகுபடி போன்ற பிற சாகுபடிகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். அரிசி சாகுபடி விவசயிகள் அரிசியை பயிரிட செய்தால் அதிக வெப்ப நிலை காரணமாக பயிர் வீணாகும் என்று பயம் இருக்கிறது. இதனால் அவர்கள் வேறு சில சாகுபடி உபயோகிக்கிறார்கள். விவசாயிகள் அரிசி சாகுபடியை விட சிறுதானிய சாகுபடி மற்றும் மலர் சாகுபடியில் அதிக லாபம் ஈட்டுவதாக கூறுகிறாரகள்.
தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை வர இருப்பதால். மக்கள் அனைவரும் சுற்றுலா இடமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வார்கள். ஊட்டி, கொடைக்கானல் என்றாலே தாவரவியல் பூங்கா தான் நினைவுக்கு வரும். அங்கு மலர்கள் செடிகள் எல்லாம் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். மேலும் அங்கு விடுமுறை நாட்களில் தன மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்காகவே விவசயிகள் மலர்களை சாகுபடி செய்து வீரப்பனை செய்கிறார்கள். எனவே இன்றைய பதிவில் பிராசிகா சாகுபடியை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
பிராசிகா சாகுபடி:
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி நடத்தப்படுவதை முன்னிட்டு பல வண்ண மலர்கள் பல ரகங்களிலும் உருவாக்கப்படுகிறது. மேலும், அலங்காரச் செடிகள், மலர்கள் ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக அதிக அளவில் தயார் செய்யப்படுகிறது. சமீபகாலத்தில் விவசாயிகள் விதியசமான மலர்கள் மற்றும் அலங்காரச் செடிகளை நடவு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
பிராசிகா சாகுபடிக்கு ஏற்ற காலம்:
குளிர்ந்த வானிலையில் (வசந்த அல்லது இலையுதிர்காலத்தில்) சிறப்பாக வளரும்.
பூச்சி கட்டுப்பாடு:
பிளே வண்டுகள் (flea beetles) இலைகளை சேதமடையச் செய்யலாம், எனவே பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும்.
சாகுபடி:
விதைகளை நாற்றாக முளைக்க வைத்து அதன் பின்னர் நடவு செய்கிறோம். நடவு செய்து 60 நாட்களில் இருந்து பூக்கள் பூக்கத் துவங்கிவிடும்.
நடவு முறைகள்:
நடவு இடைவெளி: வரிசைகளுக்கு இடையே 45-60 செ.மீ இடைவெளி, செடிகளுக்கு இடையே 30-45 செ.மீ இடைவெளி.
நடவு பருவம்: குளிர் பருவப் பிரதேசங்களில் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யலாம், வெப்பமண்டலப் பகுதிகளில் அக்டோபர் – ஜனவரி மாதங்களில் நடவு செய்யலாம்.
நீர் தேவைகள்:
பனிக்காலத்தில் அதிகமான நீர் தேவைப்படுகிறது. 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்யலாம்.
மலரின் பெயர்:
பிராசிகா இராபா (Brassica Rapa)
பிராசிகா சாகுபடி வருமானம்:
பிராசிகா மலர் சாகுபடி மூலம், குறிப்பாக “பிராசிகா இராபா” போன்ற அலங்கார மலர்களை சாகுபடி செய்வதன் மூலம், விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டலாம், குறிப்பாக முகூர்த்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும்.
இந்த பிராசிகா மலரை மலை மாவட்டத்தில் தயார் செய்து பல்வேறு சமவெளிப் பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அலங்காரத்திற்காக எடுத்துச் செல்கிறார்கள்.
Tulsi Plant Fertilizer Homemade in Tamil
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |