காலாவதியான இந்த மாத்திரைகளை இனி தூக்கி எறியாதீங்க.. ரோஸ் செடிக்கு போடும் பூக்கள் நிறைய பூக்கும்..!

Advertisement

காலாவதியான இந்த மாத்திரைகளை இனி தூக்கி போடாம கொஞ்சம் இப்படி போட்டு பாருங்கள் நிறைய பூக்கள் பூக்கும் i

ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம்.. உங்கள் வீட்டில் ரோஸ் செடி வளர்க்குறீங்களா ஆனா சரி அந்த செடி வளரமாட்டேங்குதா, இல்ல செடி நன்கு வளர்த்து ஆனால் பூக்கள் பூப்பதில்லை, அல்லது செடி நன்கு வளர்த்து பூக்கிறது ஆனால் அவற்றில் பூஞ்சைகள், இலைகள் பட்டுபோவது இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா? இந்த அனைத்து பிரச்சனைக்கும் நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த காலாவதியான மாத்திரைகள், டானிக் போதும். மாத்திரைகள், டானிக் என்று சொன்னதும் நாம் அனைத்துவகைய மாத்திரைகள் மற்றும் டானிக்கை பயன்படுத்தக்கூடாது. வைட்டமின், மெக்னீசியம் உள்ள மாத்திரைகள் மற்றும் டானிக்கை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். சரி வாங்க அது என்னென்ன மாத்திரைகள் மற்றும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Suspension Aluminium Hydroxide Syrup:Suspension Aluminium Hydroxide Syrup

ரோஸ் செடிகளில் உள்ள இலைகள் நன்கு தளிர்க்க suspension aluminium hydroxide டானிக்கை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மூடி ஊற்றி ரோஸ் செடிகள் மீது தெளித்து விடுவதன் மூலம் செரோஸ் செடியில் இலைகள் நிறைய தளிர்க்கும். இதற்கு காரணம் இந்த டானிக்கில் உள்ள மெக்னீசியம் சத்து தான். மேலும் இது தவிர பூ செடிகளுக்கு மெக்னீசியம் சத்து உள்ள டானிக்கை பயன்படுத்த்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரோஜா செடியில் நிறைய பூ பூக்க வேண்டுமா? அப்போ இந்த தண்ணீரை ஊற்றுங்க..!

Amoxycillin Capsules:Amoxycillin Capsules

Amoxycillin Capsules-ஐ பூ செடிகளுக்கு பயன்படுத்தலாம் இந்த மாத்திரை ரோஸ் செடிக்கு எப்படி பயன்படுகிறது என்றால். ரோஸ் செடியில் ஏதாவது பஃடீரியல் பிரச்சனைகள் அதாவது ரோஸ் செடியில் கரும்புலிகள், சிறு சிறு ஓட்டைகள், பூஞ்சைகள் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றை சரி செய்யுமாம். இந்த Amoxycillin Capsules மாத்திரையை ஒன்று எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு நாள் இரவு அப்படியே வைத்துவிட்டு மறுநாள் இந்த தண்ணீரை செடிகளுக்கு கொடுக்கலாம்.

Paracetamol Tablets:Paracetamol Tablets

Paracetamol Tablets பொதுவாக நமது வீட்டில் அதிகமாக வாங்கி வைத்திருப்போம். ஏன் என்று உங்களுக்கே தெரியும் திடீர் என்று காய்ச்சல் அடித்தால் அதனை ஒரு போட்டு சிறிது நேரம் உறங்கி எழுந்தாலே போதும் காய்ச்சல் சரியாகிவிடும். இந்த மாத்திரை காலாவதியாகிவிட்டால் அதனை குப்பையில் தூக்கி எறிந்துவிட வேண்டாம். ஏன் என்றால் உங்கள் தோட்டத்தில் எலிகள் தொந்தரவு இருந்தால் அதற்கு இந்த மாத்திரை பயன்படுகிறது. அதாவது Paracetamol Tablets-ஐ பவுடர் செய்து வைத்துக்கொண்டு அவற்றில் கொஞ்சம் சர்க்கரை கொஞ்சம் கோதுமை மாவு ஆகியவற்றை ஒன்றாக செய்து சிறிதளவு தண்ணீர் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் காயவைத்து தோட்டம் மற்றும் வீடுகள் ஆங்காங்கே போட்டுவைக்கவும். இந்த உருண்டையை எலிகள் சாப்பிட்டால் திரும்ப அந்த இடத்திற்கே வராதாம் கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருவேப்பிலை செடி மரமாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..

Vitamin B Capsules:Vitamin B Capsules

ரோஸ் செடிகள் மற்றும் பூ செடிகளுக்கு மழை காலம், வெயில் காலம், பனிக்காலம் ஆகிய முக்காலங்களிலும் ஏற்படும் பதிப்பிகளை சரி செய்து செடியில் நிறைய பூக்களை பூக்க வைப்பதற்கு இந்த Vitamin B Capsules பயன்படுகிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு Vitamin B Capsules மாத்திரையை தூள் செய்து போட்டு நன்றாக கலந்துவிடுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். பின் மறுநாள் இதனை ரோஸ் செடிகள் மற்றும் பூ செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement