கேரட் பயிரிடும் முறை | Carrot Cultivation
இன்றைய பதிவில் கேரட் செடி வளர்பது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். கேரட் செடியானது வசந்த காலம், கோடை மற்றும் இலையுதிர் காலங்களிலும், குளிர்காலங்களிலும் பயிர் செய்யப்படுகிறது. கேரட் அதிக கரோட்டின் தன்மையை கொண்டுள்ளது. கேரட் ஒரு குளிர்கால பயிராகும். இந்தியாவில் கேரட் பயிரிடப்படும் முக்கிய மாநிலங்கள் கர்நாடக, பஞ்சாப் , உத்திரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகும்.
மேலும், கேரட் செடியில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கேரட் வைட்டமின், நார்சத்து, தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் சோடியம் போன்றவை நிறைந்துள்ளன. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த கேரட்டில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இந்த பதிவில் கேரட் செடி வளர்ப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
மண்வளம் :
கேரட் அனைத்து வகை மண்களிலும் நன்றாக வளரும். முக்கியமாக கேரட் விவசாயத்திற்கு ஏற்ற மண் தளர்வானதாகவும், ஆழமானதாவும் மற்றும் நன்கு வடிகால் வசதியுடனும், மட்கிய சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
மட்கிய சத்துக்கொண்ட களிமண் அல்லது மணல் கலந்த களிமண் கேரட் சாகுபடிக்கு ஏற்றதாகும்.
நல்ல மகசூல் பெறுவதற்கு ஏற்ற ph வரம்பு 5.5-6.5 ஆகும். மேலும், ph 7.0 வரை உள்ள மண்ணையும் பயன்படுத்தலாம்.
விதைகள்:
கேரட் விதைகளை பயன்படுத்தி பயிரிடப்படுகின்றன.
கேரட் விதைகள் ஒரு ஏக்கருக்கு 5 முதல் 6 கிலோ விதை வரை விதைக்கலாம். இந்த விதைகள் முளைப்பதற்கு சுமார் 7-21 நாட்கள் ஆகும்.
இந்த விதைகள் முளைப்பதற்கு சுமார் 20-30 செல்ஸியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது.இந்தியாவில் கேரட் சாகுபடி செய்வதற்கு உகந்த நேரம் செப்டம்பர் மாதம் ஆகும்.
உரங்கள்:
மண்ணின் தரத்தை பொறுத்து உரங்களை போட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 30 டன் விகிதம் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஒரு ஏக்கருக்கு 40 முதல் 60 கிலோ நைட்ரஜன், 25முதல் 50 கிலோ பாஸ்பரஸ், 90 முதல் 110 கிலோ பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகின்றன.
நீர்ப்பாசனம் :
முதல் நீர்ப்பாசனம் விதைகளை விதைத்த உடனே மேற்கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப அடுத்த நீர்ப்பாசனம் அளிக்கப்படுகிறது.
மேலும் கோடைகாலத்தில் 4முதல் 5 நாட்களுக்கு ஒரு முறையும்.குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்வது பயிருக்கு போதுமான நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது. மழைக்காலத்தில் தேவைப்படும்போது மட்டுமே நீர்ப்பாசன வசதி தேவைப்படுகிறது.
பீட்ரூட் சாகுபடி செய்வது எப்படி..?
களை நிர்வாகம்:
கேரட் விவசாயம் பொறுத்தவரை களைகள் வளர்வதைப் பொறுத்து விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். இதை இயந்திரம் மூலமாகவும்,கைமுறை மூலமாகவும் களைகளை நிர்வாகம் செய்யலாம்.
தரைமயமாக்குதல் :
கேரட் விதைத்த 60 முதல் 70 நாட்களில் வேர்கள் வளர உதவும் வகையில் இதை செய்ய வேண்டும். வளரும் வேர்களின் மேற்பகுதியை மண் தூவி மூடி உச்சிகளில் நிறம் இழப்பதை தவிர்க்க வேண்டும். இதில் சூரிய ஒளி படும்போது உச்சி பச்சை நிறமாகவும், நச்சுத்தன்மையுடனும் மாறக் கூடும்.
அறுவடை :
ஆரம்ப கால கேரட்டுகள் பகுதியளவு வளர்ந்தவுடன் அறுவடை செய்யப்படுகின்றன. கேரட் மேல் முனை சுமார் 1.8 செ .மீ அல்லது அதற்கு மேற்பட்ட அளவு இருக்கும் போதே கேரட் அறுவடை செய்யப்படுகிறது.அறுவடை செய்வதற்கு முன்பு ஒரு நாளைக்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும்.
கேரட் மகசூல் :
கேரட் மகசூல் கேரட்டின் விளைச்சலை பொறுத்து மாறுபடும்.வெப்ப மண்டல வகைளில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 30 டன் வரை உற்பத்தி செய்யபடுகிறது.
மிதமான காலநிலையில் ஏக்கருக்கு சுமார் 10 முதல் 15 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
| இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |














