காலிஃபிளவர் சாகுபடி | Cauliflower Cultivation
இன்றைய பதிவில் காலிஃபிளவர் செடி வளர்பது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். காலிஃபிளவர் செடியானது கரிம பொருட்கள் மற்றும் உரங்களால் வளப்படுத்தப்பட்ட வளமான நன்கு வடிகட்டிய செழித்த மண்ணிலும் வளரும் தன்மையை கொண்டுள்ளது. காலிஃபிளவர் ஒரு குளிர்கால பயிராகும். இதில் ஸ்னோ கிரவுன், அமேசிங், ஒயிட் கான்டெசா,செல்ஃப் பிளான்ச் மற்றும் டெனாலி போன்ற பல வகையான காலிஃபிளவர் வகைகள் உள்ளன. இது அதிக உற்பத்தி தரத்தை கொண்டுள்ளன.
மேலும், காலிஃபிளவர் செடியில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. காலிஃபிளவரில் வைட்டமின், நார்சத்து, தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் சோடியம் போன்றவை நிறைந்துள்ளன. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த காலிஃபிளவரில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இந்த பதிவில் காலிஃபிளவர் செடி வளர்ப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
மண் வளம்:
காலிஃபிளவர் வளர்ப்பு பொறுத்தவரை அனைத்து வகை பகுதிகளிலும் வளரக்கூடியது. குறிப்பாக செம்மண் நிலத்தில் காலிஃபிளவர் நன்கு வளரும் தன்மைகொண்டது. மேலும்,காலிஃபிளவர் செடிக்கு சிறந்த வளர்ச்சிக்கு வளமான நன்கு வடிகட்டிய கரிம பொருள்கள் நிறைந்த மண்வளம் தேவைப்படுகிறது.
விதைகள் :
காலிஃபிளவர் விதைகள் அல்லது நாற்றுகள் மூலம் வளர்க்கலாம். காலிஃபிளவர் விதைகளை அரை அடி ஆழத்திற்கு விதைக்க வேண்டும். நாற்றுகள் மெல்லியதாக முளைத்து வரும்போது நடவு செய்யலாம். முக்கியமாக நாற்றுகள் 4-6 இலைகள் முதிர்ந்ததாகவும், நடவு செய்வதற்கு முன் நன்கு வளர்ந்த வேர் அமைப்பினையும் கொண்டிருக்க வேண்டும்.
உரங்கள்:
நடவு செய்த 8-ம் நாள், வேப்பங்கொட்டைக் கரைசலை தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதினால் வெட்டுப்புழு, வேர்களை தாக்குகின்ற வெள்ளைப் புழு, கருப்புப் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். நடவு செய்த 35-ம் நாட்களில் ஒன்றரை டன் மண்புழு உரம் கொடுக்க வேண்டும்.
நாற்று உற்பத்தி:
நாற்று நடவு முறையில் சாகுபடி செய்வதாக இருந்தால், குழித்தட்டுகளில் நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். குளித்தட்டில் தேங்காய் நார், மண்புழு உரம் ஆகியவற்றை சேர்த்து நிரப்பி விதைகளை ஊன்ற வேண்டும். அதன் பிறகு தினமும் பூவாளி கொண்டு குளித்தட்டுகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். 25 நாட்களில் குளித்தட்டுகளில் நாற்றுகள் தயாராகிவிடும்.
நீர் மேலாண்மை:
நூக்கல் சாகுபடி பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்ய வேண்டும்.
நூக்கல் வளர்ப்பு மற்றும் நூக்கல் பயன்கள்..!
களை நிர்வாகம்:
காலிஃபிளவர் விவசாயம் பொறுத்தவரை களைகள் வளர்வதைப் பொறுத்து விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். களை எடுக்கும்போதே ஒவ்வொரு செடிகளுக்கும் 3 அங்குலம் அல்லது 4 அங்குலம் இடைவெளி இருப்பது போல் அதிகப்படியான செடிகளை கொத்திவிட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
காலிஃபிளவர் சாகுபடி பொறுத்தவரை இலைப்புள்ளி நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த நடவு செய்த 15 மற்றும் 45-ம் நாட்களில் பத்து லிட்டர் நீரில், 100 கிராம் சூடோமோனாஸ் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை:-
காலிஃபிளவர் நடவு செய்த 45 நாட்களுக்கு மேல் 60 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாரிக்கிவிடும். செடிகளை வேரோடு பறித்து, வேர்களை முறுக்கி பிடுங்க வேண்டும். மேற்பகுதியில் இருக்கின்ற இலைகளை ஒடித்து அப்படியே வைக்கலாம்.
| இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |














