தென்னை மரம் ஏறுவோருக்கான கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம்

Advertisement

Coconut Development Board Insurance Subsidy in Tamil

விவசாய நண்பர்களுக்கு வணக்கம்.. விவசாயிகளின் நலன் கருதி பலவாகியன் திட்டங்கள் அறிமுக செய்யப்படுகிறது. அதன் வரிசையில் நாம் இன்று பார்க்க இருப்பது என்ன என்றால் தென்னை மரம் ஏறுவோருக்கான கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம் வழங்கபடுகிறது. அது என்ன திட்டம், இந்த திட்டத்தில் எப்படி பயன்பெறுவது. இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைவதால் என்ன பலன். இவற்றில் இணையாக ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா போன்ற தகவல்களை இன்று நாம் பார்க்கலாம் வாங்க.

தென்னை மரம் ஏறுவோருக்கான கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம்: Coconut Development Board Insurance Subsidy in Tamil

தென்னை மரம் ஏறுவோருக்காக நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அமல்படுத்தி வருகிறது.

பயன்கள்:

இந்த காப்பீட்டுத் திட்டத்தில் நீங்கள் இணைவது மூலம் உங்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்றால். தென்னை மரம் ஏறும் போது உங்களுக்கு திடீரென்று விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

அதுவே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் ரூ. 1 லட்சம் வழங்கப்படும். பயிற்சி பெறுபவர் அனைவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஒரு வருட இலவச காப்பீட்டுத் தொகையை தென்னை வளர்ச்சி வாரியம் வழங்க உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள்

கட்டணம்:

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 375 செலுத்தப்பட வேண்டும். இதில் ரூ. 281-யை வாரியம் செலுத்த உள்ளது. காப்பீட்டை புதுப்பிக்க விரும்புவோர், ரூ. 94 மட்டும் செலுத்தினால் போதும். 18 வயது முதல் 65 வயதுடைய பாரம்பரிய தென்னை மரம் ஏறுவோர் ஆண்டுக்கு ரூ. 94 செலுத்தி இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

ரூ. 94-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தலாம் அல்லது எர்ணாகுளத்தில் செலுத்தப்படக் கூடியதாக COCONUT DEVELOPMENT BOARD என்ற பெயரில் கேட்பு வரைவோலை மூலமும் செலுத்தலாம். இது குறித்த விவரங்களை www.coconutboard.gov.in என்ற இணையதளம் மூலமோ அல்லது புள்ளியியல் பிரிவு, தென்னை வளர்ச்சி வாரியம், கொச்சி என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் இப்போதே இணைத்து பயன்பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நவீன விவசாய கருவிகள் பெயர்கள்..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement