ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது – Coffee Fertilizer for Rose Plant
பொதுவாக பெருமபலன பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி வீட்டில் ரோஸ் செடி வைத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் பலவகையான ரோஸ் செடிகளை வாங்கி வளர்ப்பார்கள், இருப்பினும் அவற்றில் பூக்கள் நிறைய பூக்காது, இல்லையென்றால் தளிர்கள் அதிகமாக விடாது. இதனால் ரோஸ் செடி கூடிய சீக்கிரமாகவே பட்டுபோய்விடும். ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான உரத்தை நாம் வழங்க வேண்டும். இல்லையென்றால் செடி நன்கு வளராது, பூக்களும் பூக்காது. உரம் என்றதும் ரோஸ் செடிக்கு என்ன உரம் வழங்க வேண்டும் என்ற சந்தேகம் வரலாம். ரோஸ் செடிக்கு உரமாக வெறும் காபி தூளையே பயன்படுத்தலாம் சரி வாங்க இந்த காபி தூளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம்.
ரோஜா செடிக்கு என்ன உரம் போடலாம்
பயன்படுத்தும் முறை:
ஒரு கப் அருசி கழுவிய தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 10 ரூபாய் காபி பவுடரை கலந்துவிடவும்.
பிறகு ஒரு வாளியை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 10 கப் தண்ணீரை ஊற்றி நாம் ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் காபி பவுடர் கலவையையும் இவற்றை ஊற்றி நன்றாக கலந்துவிடுங்கள்.
பிறகு இந்த தண்ணீரை ரோஸ் செடியின் வேர் பகுதியில் இரண்டு கப் ஊற்றி விடவும். மழைக் காலமாக இருந்தால் குறைத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு பக்கெட் தண்ணீரில் சிறிதளவு பஞ்சகாவிய ஊற்றி நன்றாக கலந்துவிடவும், இந்த கலவையை ரோஸ் செடியின் மீது தெளித்துவிடவும்.
உங்கள் வீட்டில் ஒரு 10 ரோஸ் செடிகள் இருக்கிறது என்றால் இங்கு கூறப்பட்டுள்ள அளவு போதுமானதாக இருக்கும். அதைவிட குறைவாக இருந்தால் கொஞ்சமாக தயார் செய்துகொள்ளலாம், அதைவிட அதிகமாக இருந்தால் கூடுதலாக தயார் செய்துகொள்ளலாம்.
இந்த காபி தூள் கலவையை மட்டும் ரோஸ் செடிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்றி வைத்தாலே போதும் ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பெரிது பெரிதாக பூத்து குலுங்கும். நிறைய தளிர்களை விடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த தண்ணீர் போதும்..! மல்லிகை செடியில் மொட்டுக்கள் குறையவே குறையாது..!
அனைத்து விவசாயம் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |