பருத்தியில் சாறு உறிஞ்சும் பூக்களின் தாக்குதலை தடுப்பது எப்படி?

பருத்தி பயிர் பாதுகாப்பு | Crop Protection Cotton in Tamil

தமிழகத்தில் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக பருத்தி சாகுபடி அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பருத்தி சாகுபடி மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் அதிகளவு இதற்கு கவனம் செலுத்தி வருகின்றன. இந்த பருத்தி மானாவாரியிலும், இறவையிலும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடியில் போது ஆரம்ப கட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈ, மாவு பூச்சிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும் இது செடியின் வளர்ச்சியை தடுக்கின்றன. இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்த என்னென்ன வழிகள் இருக்கிறது என்று இன்றைய பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

தத்துபூச்சி தாக்குதல்:

இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் முதலில் மஞ்சளாக மாறி பின்னோக்கி வளைந்து, சுருங்கி விடும். தாக்குதல் தீவிரமாகும் போது இலையின் ஓரங்கள் செங்கல் நிறத்திற்கு மாறி, இலைகள் தீயில் கருகியது போல் காணப்படும்.

அசுவினி:

பசுமை கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும் இளம் தண்டு, கொழுந்து, இலையின் அடியில் கூட்டமாக அமர்ந்து கொண்டு சாற்றை உறிஞ்சி குடிக்கும். தாக்குதல் தீவிரமாகும் போது இலைகள் சுருங்கி வளர்ச்சி குன்றி காணப்படும் இதனுடைய இனிப்பு கலந்த கழிவுகளை உண்பதற்காக எறும்பு கூட்டமாக வரும்.

வெள்ளை ஈ:

தொடர்ந்து பருத்தி பயிரிடக்கூடிய பகுதியில் இதன் தாக்குதல் இருக்கும். வெள்ளை ஈக்கள் இலையின் அடிப்பரப்பில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் இலைகள் மஞ்சள் நிறப்புள்ளிகள் நடு நரம்பில் இருந்து ஓரத்தை நோக்கி செல்லும். இதனால் பூக்கள், சப்பைகள், மொக்கு வலுவிழந்து உதிரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇👇👇
மழைக்காலங்களில் செடிகளை பராமரிப்பது எப்படி..?

கட்டுப்படுத்தும் முறை – Cotton Plant Protection in Tamil:

Crop Protection Cotton

பருத்தி போட்ட இடத்தில் மாற்று பயிர் அதாவது பயிர் சுழற்சியை கையாள சொல்ல வில்லை. விதைப்பதற்கு முன்னதாக பூச்சி, மருந்து, விதை நேர்த்தி செய்ய வி வேண்டும்.

அதாவது ஒரு கிலோ விதைக்கு 7 கிராம் இமிடா குளோபிரிட் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

அதேபோல் 5 சதவீதம் வேப்பங் கொட்டை கரைசல் (NSK) கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் இமிடாகுளோபிரிட் 40 மில்லி, பாஸ்போமிடான் 240 னிஸி, ரோகார் 250 னிஸி இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்து வருவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும்.

பணப்பயிராக பருத்தியை ஆரம்ப காலத்தில் தாக்கும் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தின் பருத்தியை பாதுகாப்போம் நன்றி வணக்கம்..

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Pasumai Vivasayam in Tamil