உங்க வீட்டில் உள்ள December பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க டிப்ஸ்..!

Advertisement

December Poo Sedi Athigam Pooka Tips in Tamil

பூக்கள் என்றால் பிடிக்காது ஆளே இருக்க மாட்டார்கள். பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பூக்கள் என்றால் மிக மிக அதிகமாக பிடிக்கும். ஏனென்றால் பூக்களை பார்க்கும் பொழுது நமது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படும். அதனால் அனைவருமே தங்களது வீடுகளில் பூச்செடிகளை மிக மிக அதிகமாக விரும்பி வளர்க்கிறார்கள். அப்படி நாம் அனைவராலும் மிக மிக அதிகமாக விரும்பி வளர்க்கப்படும் பூச்செடிகளில் ஒன்று தான் இந்த December பூச்செடி. இந்த December பூவின் வண்ணத்திற்காக மட்டுமே பலரும் தங்களது வீடுகளில் வளர்ப்பார்கள். ஆனால் நமது வீடுகளில் உள்ள December பூச்செடி அதிக அளவு பூக்கவில்லை என்றால் அது நமக்கு வருத்தத்தை அளிக்கும். அதனால் இன்றைய பதிவில் நமது வீடுகளில் உள்ள December பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedy for December Flower Plant Growth in Tamil:

Home Remedy for December Flower Plant Growth in Tamil

என்னதான் நமது வீடுகளில் பலவகையான காய்கள் மற்றும் கனிகளின் செடிகளை வளர்த்தாலும் ஒரு சில பூச்செடிகளையாவது மிகவும் விரும்பி வளர்ப்போம். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் செடிகளில் ஒன்று தான் இந்த December பூச்செடி.

இதில் அதிக ளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கடலை புண்ணாக்கு – 200 கிராம் 
  2. வேப்ப புண்ணாக்கு – 100 கிராம் 
  3. மண்புழு உரம் – 100 கிராம்
  4. தண்ணீர் – தேவையான அளவு

வெண்டைக்காய் செடி வேகமாக வளர்ந்து அதிக காய்கள் காய்க்க இதை ட்ரை பண்ணுங்க

செய்முறை:

முதலில் பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 200 கிராம் கடலை புண்ணாக்கு, 100 கிராம் வேப்ப புண்ணாக்கு மற்றும் 100 கிராம் மண்புழு உரம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அது மூழ்கி நன்கு ஊற தேவைப்படும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நன்கு ஒரு வாரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் 10 மடங்கு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் இந்த கரைசலை உங்களது December பூச்செடிக்கு ஊற்றுங்கள். இதனை வாரம் ஒரு முறை அல்லது மாதம் நான்கு முறை என கொடுத்து வருவதன் மூலம் உங்களின் December செடி அதிக அளவு பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

ஒரே ஒரு பீர்க்கங்காய் போதும் பூக்காத முல்லை செடியிலும் 1000 பூக்கள் பூக்கும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement