டிசம்பர் பூ செடியில் பூக்கள் அதிகமாக பூக்க இப்படி செய்யுங்க..!

Advertisement

December Poo Pookka Tips in Tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். பூக்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். வீட்டில் அழகழகான பூச்செடிகள் வைத்து வளர்க்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால் சிலர் வீட்டில் செடிகள் மட்டும் தான் இருக்கும் பூக்கள் இருக்காது. அதுபோல டிசம்பர் பூ என்று சொன்னாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த வகையில் டிசம்பர் பூ செடியில் பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

விதையின் மூலம் சாமந்தி பூ செடி வளர்ப்பது எப்படி..?

டிசம்பர் பூ செடி வளர்ப்பு முறை: 

டிசம்பர் பூ செடி

டிசம்பர் பூவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இந்த பூ வெள்ளை, ரோஸ், நீலம் போன்ற நிறங்களில் இருக்கிறது. இந்த டிசம்பர் பூ பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த செடி அந்த காலத்தில் அனைத்து வீடுகளிலும் இருந்தது. ஆனால் இன்றைய நிலையில் டிசம்பர் பூ செடி ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கிறது.

இந்த பூ டிசம்பர் மாதத்தில் பூக்க தொடங்குவதால் இதை டிசம்பர் பூ என்று கூறுவார்கள். இது இன்றும் பல கிராம பகுதிகளில் காணப்படுகிறது.

இந்த செடியை நீங்கள் நர்சரியில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம். அல்லது இந்த செடிகளின் விதைகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்தும் இந்த செடியை வளர்க்க தொடங்கலாம்.

இந்த செடி செம்மண்ணில் செழிப்பாக வளரக் கூடியது. இந்த செடிக்கு போதுமான அளவு தண்ணீர் ஊற்றினாலே போதுமானது. இந்த செடியை வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

செம்பருத்தி செடி வேகமாக வளர்ந்து பூக்கள் பூக்க இதை செய்யுங்கள்..!

டிசம்பர் பூ செடியில் பூக்கள் அதிகமாக பூக்க டிப்ஸ்: 

டிசம்பர் பூ செடியில் பூக்கள் அதிகமாக பூக்க டிப்ஸ்

இந்த செடி காடுபோல் வளர கூடியது. இந்த செடிக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுவே இதற்கு போதுமானது. செடிக்கு 2 வேலை தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றாலும் ஊற்றலாம்.

அடிக்கடி செடியில் இருக்கும் காய்ந்த இலைகளை அகற்ற வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இந்த செடிக்கு உரம் போடலாம். இந்த டிசம்பர் பூ செடிக்கு மாட்டு சாணத்தை உரமாக போடலாம். மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை செடிகளுக்கு தெளிக்கலாம். 

அதுபோல  செடியின் அடியில் இருக்கும் மண்ணை கிளறி விட்டு ஆட்டு உரத்தை போட்டு மறுமுறையும் மண்ணை கிளறி விட வேண்டும். இதுபோல செய்வதால் டிசம்பர் பூ செடி உயரமாக வளரும். பூக்கள் அதிகமாக பூத்து குலுங்கும்.  

கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்..!

 

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement