வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காக்கட்டான் செடி அதிகமா பூக்க இந்த உரம் மட்டும் போதும்..!

Updated On: January 5, 2026 6:38 PM
Follow Us:
Fertilizer For Kakkattan Plant in Tamil
---Advertisement---
Advertisement

Fertilizer For Kakkattan Plant in Tamil | காக்கட்டான் பூ செடி வளர்ப்பது எப்படி.? 

நாம் அனைவருமே வீட்டில் ரோஜா செடி, மல்லிகை செடி, முல்லை செடி மற்றும் செம்பருத்தி செடி என பலவகையான செடிகளை வளர்த்து வருவோம். ஆனால் இதனை எப்படி பராமரிப்பது என்பது நமக்கு தெரியாது. அதாவது, பூச்செடிக்கு என்ன உரம் கொடுக்க வேண்டும்.? எப்போது கொடுக்க வேண்டும்.? போன்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும். அதிலும் குறிப்பாக, மற்ற செடிகளை விட காக்கட்டான் செடியை எப்படி அதிகமாக பூக்க வைப்பது.? அந்த செடியை எப்படி பராமரிப்பது போன்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும். எனவே இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் காக்கட்டான் செடி அதிகமாக பூக்க என்ன உரம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

காக்கட்டான் செடி நன்றாக வளர்வதற்கு, அதனை ஊன்றிவைக்கும்போது மாட்டு எருது மட்டும் ஆட்டு எருதுகளை மண்ணில் கலந்து விட வேண்டும். அதன் பிறகு, தண்ணீர் ஊற்றி மண்ணை நன்றாக தயார் படுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு,காக்கட்டான் செடியை ஊன்ற வேண்டும். ஊன்றிய பிறகு, நாம் சில முக்கியமான உரங்களை அதற்கு கொடுக்க வேண்டும்.  மற்ற செடிகளை போலல்லாமல் காக்கட்டான் செடிக்கு உரத்தினை அதிகமாக கொடுத்தால் மட்டுமே அதிகமாக பூக்க தொடங்கும். எனவே, உங்கள் வீட்டில் நீங்கள் காக்கட்டான் செடி வைத்துள்ளீர்கள் என்றால் இந்த உரத்தினை கொடுக்க மறந்துடாதீங்க.

காக்கட்டான் செடி நடவு செய்யும் முறை:

காக்கட்டான் செடி அதிகமாக பூக்க

  • காக்கட்டான் செடி வைப்பதற்கு உகந்த காலம் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் காக்கட்டான் செடியை நடவு செய்யலாம். அரை அடி ஆழமாக குழி வெட்டி அதுக்குள் செடியை வைத்து செம்மண் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கவும். முக்கியமாக காக்கட்டான் செடி சூரிய ஒளிபடும் இடத்தில் வைப்பது அவசியம்.
  • காக்கட்டான் செடியில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு தண்ணீர் மருந்து மற்றும் சாணி கரைசல் போன்றவற்றை அடித்துவிட வேண்டும். மேலும், காக்கட்டான் செடிக்கு தண்ணீர் அதிகம் தேங்க விடாமல் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.

காக்கட்டான் செடி அதிகமாக பூக்க:

  • காக்கட்டான் செடி அதிகமாக பூக்க வேண்டுமென்றால், முதலில் காக்கட்டான் செடியை கவாத்து செய்து விடுதல் வேண்டும். அதாவது, செடியின் பக்க கிளைகள் மற்றும் காய்ந்த கிளைகளை வெட்டி விட வேண்டும். அப்போதுதான், காக்கட்டான் செடி அதிக சத்துக்களை எடுத்து அதிகமாக பூக்க தொடங்கும்.
  • அடுத்து, காக்கட்டான் செடிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு எப்சம் உப்பை உரமாக கொடுக்க வேண்டும். அதாவது, காக்கட்டான் செடியின் வேர்ப்பகுதியில் 1 ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காக்கட்டான் செடி அதிகமாக பூக்கும்.

காக்கட்டான் செடி

சின்னதாக இருக்கும் முல்லை செடியிலும் 1000 மொட்டுகள் வரை வைக்க பழைய சோறு மட்டும் போதும் 

  • காக்கட்டான் செடி செம்பட்ம்பர் முதல் மே வரை அதிகமாக பூக்கும். அந்த காலத்தில் காக்கட்டான் செடிக்கு தொழுஉரம் கொடுத்து வாரத்திற்கு ஒருமுறை மண்ணை நன்கு கிளறி விட வேண்டும்.
  • மேலும், கடலை புண்ணாக்கு கரைசலையும் உரமாக கொடுக்கலாம். காக்கட்டான் செடியில் பூச்சி தாக்குதல் ஏதும் இருப்பினும் அதற்கு வேப்ப எண்ணெய்யையும் கோமியத்தையும் தெளித்து விட வேண்டும்.
  • அதாவது, சிறிதளவு வேப்ப எண்ணெய் மற்றும் கோமியத்தை கலந்து ஒரு நாள் வரை அப்படியே வைத்து விடுங்கள். அடுத்த நாள் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து காக்கட்டான் செடிக்கு தெளித்துவிட விட வேண்டும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதில் பூக்கள் அதிகமாக பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Malligai Plant Growing Faster in Tamil

ஒரே ஒரு வாழைக்காய் போதும்.. பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்..!

Maavu Poochi Viratta Tips in Tamil

செடிகளில் உள்ள மாவுப்பூச்சியை நிரந்தரமாக போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

பலாப்பழம் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

முலாம்பழம் சாகுபடி

கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

ஜாதிக்காய் சாகுபடி

ஜாதிக்காய் சாகுபடி எப்படி செய்வது.? மற்றும் ஜாதிக்காய் பயன்கள்..!

Paneer Rose Plant Growing Tips

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil

இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடி தளதளன்னு வளர இந்த தண்ணீர் போதும்..!

summer care of rose plant in tamil

வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!