2 நாள் போதும் பட்டுப்போன பூச்செடிகள் துளிர்விடும்..! அதுக்கு இந்த தண்ணீர் மட்டும் போதும்..!

Advertisement

Flower Plant Growing Liquid Fertilizer in Tamil

வணக்கம் நண்பர்களே..! உங்கள் வீட்டில் பூச்செடிகள் இருக்கிறதா..? ஏன் கேட்கிறேன் என்றால் நம்மில் பலருக்கும் வீட்டை சுற்றி அழகழகான பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பலரும் நர்சரியில் இருந்து செடிகளை வாங்கி வந்து வளர்க்கிறார்கள். இவ்வளவு ஏன் பலரும் தங்கள் வீட்டு மாடியில் மாடித்தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மாடித்தோட்டத்தில் குட்டி விவசாயமே செய்து வருகிறார்கள். சரி பூச்செடிகள் வளர்க்கும் பலருக்கும் இருக்க கூடிய கவலை என்றால் அது செடிகள் பட்டுபோவது தான். அதனால் இன்று நம் பதிவின் வாயிலாக 2 நாட்களில் பட்டுப்போன செடிகளை துளிர்விட செய்யும் கரைசல் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க..!

காய்ந்த செடிகள் கூட 3 நாட்களில் துளிர்விடும்.. அதற்கு இந்த கரைசலை 1 கிளாஸ் ஊற்றுங்க போதும்

2 நாட்களில் செடிகளை துளிர்விட செய்யும் கரைசல்: 

2 நாட்களில் செடிகளை துளிர்விட செய்யும் கரைசல்

  1. வாழைப்பழ தோல்
  2. தண்ணீர்

உங்கள் வீட்டில் வாழைப்பழம் இருந்தால் அதை சாப்பிட்டுவிட்டு என்ன செய்வீர்கள். வாழைப்பழ தோலை கீழ் தூக்கி போடுவோம். ஆனால் இனி அப்படி செய்யாதீர்கள். இந்த வாழைப்பழ தோல் எவ்வளவு இருக்கோ அதை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து பாத்திரத்தில் இந்த வாழைப்பழ தோலை போட்டு 2 கப் அல்லது 3 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இதை மூடி 3 நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

வளராத செடிகளை கூட செழிப்பாக வளரவைக்க இந்த ஒரு பொருள் மட்டும் போதும்

3 நாட்கள் கழித்து இந்த நீரை வடிகட்டி, செடிகளில் ஊற்றுங்கள். பட்டுப்போன செடியாக இருந்தாலும் சரி, வளராத செடியாக இருந்தாலும் சரி, பூக்கள் பூக்காத செடிகளாக இருந்தாலும் சரி இந்த கரைசலை தொடர்ந்து ஊற்றினால் செடிகள் நன்றாக செழிப்பாக வளரும். பட்டுப்போன பூச்செடிகள் கூட துளிர்விடும்.

செடிகள் நன்கு வளர கரைசல்: 

செடிகள் நன்கு வளர கரைசல்

அடுத்து ஒரு கிண்ணத்தில் 1/2 கப் அளவிற்கு டீத்தூள் எடுத்து கொள்ளுங்கள். பின் அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். இந்த நீரை 1 நாள் முழுவதும் அப்படியே மூடி வைக்க வேண்டும்.

மறுநாள் இந்த நீரை எடுத்து வடிகட்டி செடிகளுக்கு ஊற்றுங்கள். இதுபோல இந்த கரைசலை செடிகளுக்கு ஊற்றி வந்தால் செடிகள் நன்கு செழிப்பாக வளரும். பட்டுப்போன செடிகள் கூட துளிர்விடும்.

வாடிய ரோஜா செடியில் கூட பூக்கள் பூக்க வைக்கலாம்..  அதுக்கு இப்படி செய்யுங்க..

 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement