மாமரம் வேகமாக வளர்த்து அதிக காய்கள் காய்க்க
வீட்டில் தோட்டம் அமைப்பது என்றால் அனைவருக்கும் பிடிக்கும். நமக்கு பிடித்த பூக்கள் முதல் காய் என பிடித்த அனைத்தையும் வைத்து வளர்க்க ஆசைப்படுவோம். பூ என்றால் ரோஜா மல்லிகை மரம் என்றால் மாமரம் அல்லது கொய்யா மரம் வளர்க்க ஆசைப்படுவோம். பொதுவாக அனைவருக்கும் பழமாக இருந்தாலும் சரி இல்லை காயாக இருந்தாலும் சரி அதில் பிடித்த ஒன்று என்னவென்றால் மாங்காய் மற்றும் மாம்பழம் தான். இந்த மாமரம் நிறைய பேர் அவர்களுடைய வீட்டிலேயே வளர்த்து வருகிறார்கள். இத்தகைய மாம்பழத்தை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட நமது வீட்டிலேயே காய்க்கும் பழங்கள் தான் நமது உடலுக்கு நல்லது. ஏனென்றால் கடைகளில் விற்கும் பழத்தில் ரசாயனம் கலக்கப்படுகிறது. ஆனால் நமது வீட்டில் இருக்கும் மரத்தில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு நிறைய மாங்காய் காய்ப்பது இல்லை. அதனால் இன்றைய பதிவில் மாமரத்தில் நிறைய மாங்காய் கொத்து கொத்தாக காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் இயற்கை முறையில் எளிதாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
Grow Care Mango Trees Faster:
மண் மற்றும் சூரிய ஒளி:
மாமரம் வைப்பதற்கு முன்பு மண்ணின் தரத்தை பரிசீலிக்க வேண்டும். அதாவது மாமரம் வைப்பதற்கான மண் ஈரப்பதம் மிக்கதாக இருக்க வேண்டும். தண்ணீரை உடனே உறிஞ்சுவதாக இருக்க கூடாது.
நீங்கள் தேர்வு செய்யும் இடம் போதுமான சூரிய ஒளி கொண்டதாக இருக்க வேண்டும்.
உங்கள் மா மரத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலையை 21°C முதல் 4°C வரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
நீர் தேவை:
மாமரத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. ஆனால் வறட்சி காலங்களில் ஈரப்பதம் இருக்கும் படி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
கோடைகாலங்களில் காலை மாலை இரு நேரங்களிலும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உரம்:
மாமரத்திற்கு கரிம உரங்கள் சிறந்தது.
மாமரத்தில் பூச்சிகள் தாக்காமல் இருக்க நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ள உரங்களை பயன்படுத்துங்கள்.
இளம் கன்றுகளுக்கு குறைந்தளவு நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சேர்ப்பதால் கன்றுகள் வேகமா வளரும்.
உரங்களை மரங்களுக்கு கொடுக்கும் போது தரையில் 1.2 முதல் 1.5 மீ ஆழத்திலும் மரத்தில் இருந்து 2.5 செமீ தொலைவிலும் இருக்க வேண்டும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |