ரோஜா வளர்ப்பு
வீட்டில் செடி வளர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் முதலில் தேர்ந்தெடுப்பது என்னவோ ரோஜா பூச்செடியாகத் தான் இருக்கிறது. ஆசையாக வாங்கி நட்டு வைத்தால் அது முளைக்குமா என்றால் சந்தேகம் தான். காரணம் ரோஜா செடி வளர்வதற்கான சூழல் மண் ஆகியவை மற்ற செடிகளில் இருந்து மாறுபடுகிறது. அதனால் நீங்கள் என்ன வகையான உரங்கள் கொடுத்தாலும் துளிர்விடுவதும் காய்வதுமாகவே இருக்கும். இப்படி உங்க வீட்டிலும் ரோஜாச்செடிகள் இருந்தால் கவலை வேண்டாம். ரோஜா வளர்ப்பதற்கான மண்ணை தயார்படுத்து முறை முதல் பூக்களின் நிறத்தை மெருகூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட சில குறிப்புகள்:
-
ரோஜா செடி தேர்வு:
ரோஜா செடியை தேர்ந்தெடுத்து வாங்குவதில் தான் நமது முதல் கவனம் இருக்க வேண்டும். தொடர்ந்து ரோஜா செடியில் இருந்து பூக்கள் வளர்வதற்கான கால பெறுவதற்கு நம்முடைய காலநிலைக்கு உகந்தது போல, ரோஜா செடிகளை பார்த்து வாங்க வேண்டும்.
உதாரணமாக நாட்டு ரோஜா, பன்னீர் ரோஜா, பட்டன் ரோஸ் என்றழைக்கப்படும் மினியேச்சர் ரோஜா வகைகள் நல்ல வெயிலை தாங்கி வளரக்கூடிய ரோஜா செடிகள்.
காஷ்மீர் ரோஜா, செவன்டேஸ் ரோஜா – இவையும் வெயிலில் நன்றாகவே பூக்கக்கூடிய ரோஜா செடிகள்.
ரோஜாச் செடியை வாங்கும் போது அதிக கிளைகள், தண்டுகள், பெரிய தொட்டியில் இருக்கும் ரோஜா செடிகளை பார்த்து வாங்க வேண்டும்.
நர்சரி கடையில் ரோஜா செடியை வாங்கும்போது, ரோஜா செடி இலைகளில் நோய் தாக்குதல், பூச்சித் தாக்குதல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, புதிய துளிர்கள் அதிகம் காணப்படும் ஆரோக்கியமான செடிகளாக வாங்க வேண்டும்.
2. மண் கலவை
முதலில் மண் கலவை பாதி மற்றும் ‘கோகோ பீட்’ எனப்படும் தேங்காய் நார் கலவை பாதி என்று சேர்ப்பது ரோஜா செடிக்கு நல்ல ஊட்டசத்து கொடுக்கும் ஒரு மண் கலவை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
அல்லது தொட்டியில் பாதி அளவிற்கு மண்ணும் மீதி அளவிற்கு தேங்காய் நாரை நன்கு காய வைத்து பொடியாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது நர்சரிகளில் வாங்கியும் சேர்க்கலாம். இரண்டையும் கலந்து ரோஜா செடியை நட்டு வையுங்கள். 10 நாட்களில் செடி துளிர் விட்டு முளைக்க ஆரம்பித்துவிடும்.
3.நடவு செய்யும் முறை:
ரோஜா செடியை நர்சரி கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு உடனடியாக நடவு செய்யக் கூடாது. ஏனெனில், நர்சரியில் ஒரு காலநிலையில் ரோஜா செடிகள் இருக்கும். நம்முடைய வீட்டிற்கு எடுத்து வந்த பின்னர், கால நிலை மாறுவதால் செடிகள் இறக்க நேரிடும். ரோஜா செடியை வாங்கி வந்து, மூன்று நாட்கள் நம்முடைய வீட்டின் நிழற்பாங்கான இடத்தில் வைத்திருந்து, பின்னர், நடவு செய்ய வேண்டும்.
ரோஜா செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு மிகச் சரியான தொட்டி எதுவென்றால் மண்தொட்டிதான். முடிந்தவரை மண் தொட்டியில் செடிகளை வைத்தால் இன்னும் அதிக பூக்களை பெற முடியும். மண் தொட்டி இல்லை என்றால், பிளாஸ்டிக் தொட்டியில் வைக்கலாம்.
பிளாஸ்டிக் தொட்டியில் வைக்கும்போது வர்ணம் பூசி வைப்பது சிறந்தது. இல்லையென்றால் கோடை காலங்களில், தொட்டியில் பாசி பிடித்து ரோஜா செடிகளின் வேர்களுக்கு பாதிக்கும்.
முடிந்தவரை மாலை வேளையில் ரோஜா செடிகளை நடவு செய்வதது சிறந்தது.
ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…
7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |