மொட்டுகளிலிருந்து ரோஸ் செடி வளர்க்கும் முறை..!

Growing Roses from Buds in Tamil

மொட்டுகளிலிருந்து ரோஸ் செடி வளர்க்கும் முறை..! | Growing Roses from Buds in Tamil

ரோஸ் செடி வீட்டில் வளர்ப்பது என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். ஆனால் நர்சரியாக இருந்தாலும் சரி ரோட்டோரங்களில்  விற்கப்படும் பூச்செடி காரராக இருந்தாலும் சரி அவர்களிடம் ஒரு ரோஸ் செடி வாங்குகிறோம் என்றால் ஒரு ரோஸ் செடியின் விலை கண்டிப்பாக 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை இருக்கும். அவர்கள் ஒரு ரூபாய் கூட குறைத்துக்கொள்ள மாட்டார்கள். ஏன் நாம் அவ்வளவு ரூபாய் காசு செலவு செய்து ரோஸ் செடிகளை வாங்க வேண்டும். ரோஸ் செடியில் பூ மலர்ந்து உதிர்ந்த மொட்டுக்களை வைத்து வீட்டிலேயே ரோஸ் செடிகளை உருவாக்க முடியும் அது எப்படி? என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க ரோஸ் மொட்டுகளில் இருந்து ரோஸ் செடிகளை எப்படி வளர்க்கலாம் என்று பார்க்கலாம்.

ஸ்டேப்: 1

 

முதலில் ரோஸ் செடியில் இருக்கும் உதிர்ந்த மொட்டுக்களை கட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

மொட்டுக்கள் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் இருக்க வேண்டும். அது போன்ற மொட்டுக்களை பறித்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பின்பு மொட்டுகளில் உள்ள காம்புகளை மட்டும் ஓட்ட நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

பிறகு ஒரு பவுலில் ஒரு பெரிய பூண்டு பல்லினை எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள ரோஸ் மொட்டுக்களை சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
விதையின் மூலம் சாமந்தி பூ செடி வளர்ப்பது எப்படி..?

ஸ்டேப்: 5

15 நிமிடம் கழித்து அவற்றில் இருந்து ரோஸ் மொட்டுக்களை எடுத்துவிடவும். பின் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதை சிறிதளவு கீழ் படத்தில் காட்டியுள்ளது போல் கட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் ஒரு பூத்தொட்டியில் மண் நிரப்பி அதில் நறுக்கி வைத்த வாழைப்பழத்தை உள்ளே வைக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

இந்த ரோஸ் மொட்டுக்களை மேல் படத்தில் காட்டியுள்ளது போல் வைக்கவும். அதாவது மொட்டின் மலர்ந்த பகுதி வாழைப்பழத்தில் படவேண்டும். காம்பு நறுக்கிய பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும். அதுபோல் மொட்டுக்களை வைத்துவிட்டு பிறகு அதன் மேல் மண்ணை கொட்டி மொட்டுக்களை மூடிவிடவும்.

ஸ்டேப்: 7

மொட்டுக்களை மண்ணை கொட்டி மூடிய பிறகு ஏற்கனவே மொட்டுக்களை பூண்டில் ஊறவைத்தோம் அல்லவா அந்த நீரை மட்டும் அந்த பூத்தொட்டியில் ஊற்றிவிடவும். பிறகு 20 நாட்கள் வரை காத்திருங்கள்.

இந்த 20 நாள் இடைவேளையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீரை லேசாக தெளித்துவிடவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வருடம் முழுவதும் பூக்கள் பூக்கும் பூச்செடிகள் எது..?

ஸ்டேப்: 8

20 நாள் கழித்து அந்த பூ தொட்டியை பார்த்தீர்கள் என்றால் அந்த தொட்டியில் ரோஸ் செடி வளர்ந்து இருக்கும். அவ்வளவு தான் நீங்கள் இந்த செடிகளை வேறொரு தொட்டியில் மாற்றியும் வளர்க்கலாம் அல்லது அதே தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம்.

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  Vivasayam in Tamil