காய்க்காத கொய்யா மரமும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு உரம் மட்டும் போதும்..!

Guava Tree Fertilizer in Tamil

Guava Tree Fertilizer in Tamil

அனைவரது வீட்டிலும் வளர்க்கக்கூடிய மரங்களில் முக்கியமான மரம் கொய்யா மரம். இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் வீட்டில் ஒன்றிற்கு இரண்டு மரம் என வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சில மரங்கள் வளர்ந்துகொண்டே இருக்கும் ஆனால் காய்கள் வைக்கவே வைக்காது. இன்னும் சில மரங்கள் வளரவே வளராது. அப்படி வளராமல் இருக்கும் மரங்களுக்கு நாம் சில ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உரத்தினை அளிக்க வேண்டும். அப்போது தான் மரம் செழிப்பாக வளர தொடங்கும். எனவே, இப்பதிவில் கொய்யா மரம் செழிப்பாக வளர என்ன உரம் கொடுக்க வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Grow Guava Tree Faster in Tamil:

How to Grow Guava Tree Faster in Tamil

உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • எள்ளு புண்ணாக்கு – 1/4 கிலோ 
  • புளித்த மோர் – 2 கப்

முதலில் பெரிய அகலமான பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து கொள்ளுங்கள். இதில் எள்ளு புண்ணாக்கு மற்றும் புளித்த மோரினை சமமான அளவில் எடுத்து கொள்ளுங்கள்.

இத்துடன் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 1 வாரம் வரை நொதிக்க விடுங்கள்.

கருவேப்பிலை செடி மரமாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..

1 வாரத்திற்கு பிறகு, இந்த கரைசலில் 1/2 லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கொய்யா மரத்தின் வேர்ப்பகுதியில் ஊற்றி விடுங்கள்.

இந்த கரைசலை வாரத்திற்கு ஒருமுறை மரத்திற்கு உரமாக கொடுத்து வந்தால் கொய்யா மரத்தில் எளிதில் பிஞ்சு வைக்க தொடங்கும்.

முக்கியமாக, கொய்யா மரம் வைத்திருப்பவர்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று கவாத்து செய்து விடுதல். கொய்யா செடி வளர வளர அதன் பக்கவாட்டு கிளைகள் அல்லது நுனிப்பகுதியை கவாத்து செய்து விடுவதன் மூலம் கொய்யா செடி அதிகமாக காய்க்க தொடங்கும்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்