Gundu Malli Chedi Valarpathu Eppadi
பெண்களுக்கு என்ன தான் பல பூக்கள் பிடித்து இருந்தாலும் கூட மல்லிகை பூவின் மீது ஒரு தனி ஆசை மற்றும் ஆர்வமானது காணப்படும். அதிலும் குறைப்பாக மற்ற பூக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது மல்லிகை பூவில் மட்டும் எண்ணற்ற வகைகள் இருக்கிறது. அதாவது ஜாதிமல்லி, குண்டு மல்லி, முல்லை பூ மற்றும் மதுரை மல்லி என இத்தகைய வகைகள் இருக்கிறது. இதில் எப்படி இவ்வளவு வகைகள் இருக்கிறதோ அதே போல இதனை சரியான முறையில் பராமரிப்பதிலும் நிறைய வகைகள் அல்லது மாற்றங்கள் உள்ளது. ஆகவே இன்றைய பதிவில் மல்லிகை பூவில் ஒன்றான குண்டு மல்லி பூச்செடியினை துளிர் விட செய்து, அதிகம் பூக்கள் பூக்க என்ன செய்யலாம் என்பதையும் தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
குண்டு மல்லி பூ செடி துளிர் விட:
குண்டு மல்லிகை பூ செடியினை வெயில் இல்லாத இடத்தில் மட்டும் நடவு செய்ய கூடாது. அதேபோல் நன்றாக வெயில் இருக்கும் காலத்திலும் நடவு செய்ய கூடாது. எனவே இவை இரண்டிற்கும் ஏற்ற மாதிரியாக நடவு செய்வது நல்லது.
செடி ஓரளவு வளர்ந்த பிறகு அதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகாவியம் உரத்தினை கொடுப்பதன் மூலம் செடி நன்றாக துளிர் விட்டு செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.
மேலும் வாரம் 2 முறை தண்ணீர் விட வேண்டும்.
10 நாளில் கற்றாழை செடி நன்கு சதைப்பற்றுடன் வளர இதை 1 டீஸ்பூன் கொடுங்க போதும்
குண்டு மல்லி அதிகம் பூக்க டிப்ஸ்:
செடி நன்றாக துளிர் விட்ட பிறகு அதற்கு அடி உரம் கொடுக்க வேண்டும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துகொள்ளங்கள்.
- முட்டை ஓடு
- வாழைப்பழத்தோல்
- டீத்தூள்
இந்த பொருளை தேவையான அளவு எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து பின்பு பவுடர் போல அரைக்க வேண்டும். அதன் பிறகு செடியின் நுனி வேர் வரும் இடத்தில் ஒரு குழியினை பறித்து அதில் அரைத்துள்ள வைத்துள்ள பொடியில் 1 கைப்பிடி அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மூடி விடுங்கள்.
இத்தகைய முறையினை செய்வதன் மூலம் குண்டு மல்லி பூ செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து செடி நிறைய பூக்கள் பூத்து குலுங்க ஆரம்பிக்கும்.
வெறும் 10 நாட்கள் குண்டு மல்லி பூ செடி பூத்து குலுங்க இதை பற்றி பண்ணுங்க
கொத்தமல்லி செடி 3 நாளில் வேகமாக வளர இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |