Gundu Malligai Sedi Athigam Pooka Tips in Tamil
பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றாலே மிக மிக அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக இந்த மல்லிகை பூ என்றால் பிடிக்காத ஆளே இங்கு இருக்கவே மாட்டார்கள். அதனால் இன்றைய சூழலில் அனைவருமே தங்களது வீடுகளில் உள்ள தோட்டம் அல்லது மாடி தோட்டங்களில் நமது மனதிற்கு மிகவும் பிடித்த இந்த மல்லிகை பூச்செடியை அனைவருமே தங்களது வீடுகளில் வளர்க்கிறார்கள். அப்படி மல்லிகை பூச்செடியை விரும்பி வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது மல்லிகை பூச்செடியை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன். ஆனால் எனது பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
மல்லிகை பூ செடி வளர்ப்பு முறை:
பொதுவாக பூக்கள் என்றாலே நாம் அனைவருக்குமே மிக மிக அதிகமாக பிடிக்கும். ஏனென்றால் பூக்களிடம் இருந்து வரும் வாசனை என்பது நாம் அனைவருக்குமே மிக மிக பிடிக்கும்.
அதனால் நமது வீடுகளில் பலவகையான பூச்செடிகளை வைத்து வளர்போம் அப்படி நாம் வளர்க்கும் பலவகையான பூச்செடிகளில் ஒன்று தான் இந்த மல்லிகை பூச்செடியும் ஒன்று.
அப்படி நாம் மிகவும் விரும்பி வளருக்கும் மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:
- அரிசி தண்ணீர் – 4 லிட்டர்
- காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு
- கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
- வேப்பம் புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
3 நாளில் குண்டு மல்லி பூ செடி துளிர் விட்டு பூக்கள் பூக்க இதை ட்ரை பண்ணுங்க
பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் அரிசி தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
காய்கறி கழிவினை சேர்த்து கொள்ளவும்:
பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கடலை புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:
அடுத்து அதனுடனே 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கினையும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாரத்திற்கு அப்படியே விடுங்கள்.
அதற்கு பிறகு இதனை உங்களின் மல்லிகை பூச்செடிக்கு ஊற்றுங்கள். இதனை தொடர்ந்து செய்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூத்து குலுங்குவதை நீங்களே காணலாம்.
வீட்டு தோட்டத்தில் கொத்துக் கொத்தாக கொத்தவரங்காய் காய்க்க சில Tips….
கொத்தமல்லி செடி 3 நாளில் வேகமாக வளர இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |