Home Made Organic Fertilizer
செடிகள் வளர்ப்பதற்கு அனைவருமே ஆசைப்படுவார்கள். வீட்டை சுற்றி அழகழகான செடிகள் வளர்ப்பதற்கு அனைவருக்குமே பிடிக்கும். அதனால் பலரும் கடைகளில் இருந்து அழகழகான செடிகளை வாங்கி வந்து வளர்க்கிறார்கள். அப்படி வளர்க்கும் போது சிலரது வீடுகளில் வளர்க்கும் செடிகள் நன்கு செழிப்பாக வளரும்.
ஆனால் ஒருசில வீடுகளில் செடிகள் வளராமல் அப்படியே இருந்து பட்டுபோய்விடும். அப்படி உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளும் வளராமல் இருக்கிறதா..? அப்போ இந்த பதிவில் கூறியுள்ளது போல செய்யுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் செடிகள் செழிப்பாக வளரும்..! வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
வளராமல் இருக்கும் செடிகள் தாறுமாறாக வளர இந்த கரைசல் மட்டும் போதும்..! |
Home Made Organic Fertilizer in Tamil:
சிலர் வீட்டில் வளரும் செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவார்கள். தினமும் தண்ணீர் ஊற்றியும் செடிகள் வளரவில்லை என்று சொல்லி புலம்புவீர்கள். ஆனால் இனி அப்படி புலம்ப தேவையில்லை. உங்கள் வீட்டில் நீங்கள் தினமும் வேண்டாம் என்று கீழே ஊற்றும் இந்த தண்ணீர் மட்டும் போதும்.
அது வேறவொன்றும் இல்லை அரிசி கழுவிய தண்ணீரை தான் கூறுகின்றோம். அரிசி கழுவிய தண்ணீரில் இருக்கும் சத்துக்கள் செடிகள் செழிப்பாக வளர்ந்து பூக்கள் மற்றும் காய்கள் காய்க்க உதவுகிறது. அதனால் இந்த அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றாமல் செடிகளுக்கு ஊற்றுங்கள். செடிகள் செழிப்பாக வளரும்.
வீட்டில் உள்ள செடிகள் அனைத்தும் செழித்து வளர வாழைப்பழ கரைசல் தயாரிக்கும் முறை..! |
வெங்காய தோல்:
நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எரியும் இந்த பூண்டு தோல் மற்றும் வெங்காய தோலும் செடிகளை நன்றாக வளர செய்கிறது. அதற்கு பூண்டு தோல், வெங்காயத் தோலை எடுத்து தண்ணீரில் 1 நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
பின் அதை எடுத்து செடிகளுக்கு ஊற்றலாம். இதில் சல்பர் அதிகமாக இருப்பதால் செடிகள் நன்கு வளரும். இந்த வெங்காயத் தோலை செடிகளின் வேர்பகுதியிலும் போட்டு விடலாம். இது செடிகளுக்கு உரமாக பயன்படுகிறது. இந்த நீரை நீங்கள் பூச்செடிகளுக்கு ஊற்றுவதால் பூக்கள் அதிகமாக பூக்கும்.
சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..! |
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் |