காய்க்காத திராட்ச்சை செடியிலும் கிலோக்கணக்கில் காய்கள் காய்க்க இதை ஊற்றுங்க போதும்..!

Advertisement

Home Remedies for Grape Plant Growth in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி தோட்டம் அமைத்து செடிகளை வளர்க்கும் அனைவரின் வீட்டில் உள்ள பலவகையான செடிகளில் ஒன்று தான் இந்த திராட்சை செடி. ஏனென்றால், இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் திராட்சை என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே மிக மிக அதிக அளவு பிடிக்கும். சிலரது வீட்டில் ரொம்ப நாட்களாக திராட்சை செடி இருக்கும். ஆனால் திராட்சை பழம் அதிகமாக காய்த்து இருக்காது.

இப்படி உங்க வீட்டில் உள்ள திராட்சை செடியிலும் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் திராட்சை செடியில் அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

திராட்சை செடி வளர்ப்பு முறை:

Natural fertilizer for grape plants in tamil

ஒரு தாவரம் நன்கு செழித்து வளர வேண்டும் என்றால் அதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது மண்கலவை தான். அதேபோல் தான் திராட்சை செடிக்கும் மண்கலவை மிக மிக முக்கியம்.

அதனால் இரண்டு பங்கு செம்மண், ஒரு பங்கு மணல், ஒரு மங்கு தொழுஉரம் மற்றும் உயிர் உரங்கள் அனைத்தும் ஒரு டீஸ்பூன் என சேர்த்து நன்கு கலந்து மண்கலவையை தயாரித்து அதில் நாம் நமது திராட்சை செடியை நடவு செய்து வளர்த்து வந்தால் அது நன்கு வளர தொடங்கும்.

ஆனாலும் அதற்கு உரம் அளிப்பதன் மூலமும் அதில் அதிக காய்கள் காய்க்க செய்ய முடியும். அது என்ன உரம் அதை எவ்வாறு அளிப்பது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

உரத்திற்கு தேவையான பொருட்கள்:

  1. கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
  2. வேப்பம் புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
  3. அரிசி கழுவிய தண்ணீர் – 2 லிட்டர் 
  4. நன்கு புளித்த மோர் – 1 லிட்டர் 

தோட்டத்தில் பூச்செடிகளை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக இந்த தவறுகளை மட்டும் பண்ணிடாதீங்க

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு, 1 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு மற்றும் 2 லிட்டர் அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் நன்கு புளித்த மோரினை சேர்த்து நன்கு கலந்து ஒரு வாரத்திற்கு அப்படியே விடுங்கள. அதன் பிறகு அதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிக்கட்டி ஐந்து மடங்கு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து உங்களது திராட்சை செடியின் வேர்களில் ஊற்றுங்கள்.

இதனை ஒரு மாதத்திற்கு ஒருமுறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களது திராட்சை செடியில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க தொடங்குவதை நீங்களே காணலாம்.

இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் காய்காத நெல்லிக்காய் மரமும் கிலோ கணக்கில் காய்க்க தொடங்கும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement