Home Remedies for Rose Plants Growing in Tamil
நாம் அனைவருக்குமே பூக்கள் என்றால் மிக மிக அதிக அளவு பிடிக்கும். அதனால் நாம் அனைவருமே நமது வீட்டில் உள்ள சிறிய தோட்டத்தில் கூட அதிக அளவு பூச்செடிகளை வைத்து வளர்ப்போம். அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் பூச்செடிகளில் ஒன்று தான் இந்த ரோஜா பூச்செடி. அப்படி நாம் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கஷ்டப்படும். அதனால் அதிக அளவு பூக்களை பூக்க வைப்பதற்கு நாமும் பலவகையான முயற்சிகளை மேற் கொள்வோம் ஆனால் நமது முயற்சிகள் அனைத்து நல்ல பலனை அளித்திருக்குமா என்றால் நமது பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் நமது வீட்டில் உள்ள ரோஜா பூச்செடியை அதிக அளவு பூக்களை பூக்க வைப்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
கடுகு மட்டும் போதும் குச்சிபோல் உள்ள ரோஜா செடியும் துளிர்விட்டு பூத்து குலுங்கும்
ரோஜா செடி துளிர் விட:
பொதுவாக நம்மில் பலரும் நமது வீட்டில் உள்ள ரோஜா செடியை அதிக அளவு சூரிய ஒளி கிடைக்காத இடத்தில் வைத்து வளர்ப்போம். ஆனால் அது தவறான செயல் பொதுவாக ரோஜா செடிகளுக்கு குறைந்தது 6 மணிநேரமாவது சூரிய ஒளி கிடைக்க வேண்டும்.
மேலும் நமது வீட்டில் உள்ள ரோஜா செடியில் பூத்து உள்ள பூக்களை உடனடியாக நறுக்கி எடுத்து விட வேண்டும். இப்பொழுது நமது வீட்டில் உள்ள ரோஜா பூச்செடி அதிக அளவு பூக்க உதவு ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- உளுந்து – 1 கைப்பிடி அளவு
- அரிசி கழுவிய தண்ணீர் – 1 லிட்டர்
- மஞ்சள்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
1 கப் தேங்காய் பால் போதும் மாதுளை செடியில் உள்ள பிஞ்சிகள் அனைத்தும் காய்களாக மாற
செய்முறை:
முதல் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு உளுந்தினை நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் அரிசி கழுவிய தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து ஒரு வாரத்திற்கு அப்படியே இருக்க விடுங்கள்.
பின்னர் அத்துடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நமது ரோஜா செடிகளுக்கு ஊற்றுங்கள். இதனை ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நமது ரோஜா செடி நன்கு பூத்து குலுங்க ஆரம்பித்துவிடும்.
ஒரே ஒரு கிளாஸ் மட்டும் இதை ஊற்றுங்கள் குச்சியாக இருந்த ரோஜா செடியும் பூத்து குலுங்கும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |