வாழைத்தார்களில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்..!

Advertisement

Homemade Fertilizer for Banana Trees in Tamil

பொதுவாக நமது பாரம்பரியத்தில் முக்கனிகள் என்று கூறுவார்கள். அதாவது மா, பலா, வாழை என்பது தான் அந்த முக்கனிகள் ஆகும். இதில் மூன்றாவதாக உள்ள வாழை என்பது வாழைமரம் ஆகும். இந்த வாழைமரம் என்பது மிகுந்த பயனுள்ளது. அதாவது இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. அதனால் இதனை அனைவருமே வளர்ப்போம். ஆனால் ஒரு சிலரின் வீட்டில் உள்ள வாழைமரத்தில் நீண்ட நாட்களாக குலை தள்ளாமல் இருக்கும். மேலும் ஒரு சிலரின் வீட்டில் உள்ள வாழைமரத்தில் அதிக அளவு குலை தள்ளும் ஆனால் காய்கள் பெருகவே பெருக்காமல் இருக்கும். இப்படி உங்கள் வீட்டின் வாழைமரத்திலும் குலை தள்ளாமல் மற்றும் தள்ளிய குலையும் பெருக்காமல் உள்ளதா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இந்த பதிவில் இயற்கையான முறையில் உங்க வீட்டின் வாழைமரத்திலும் குலை தள்ளி, தள்ளிய குலை பெருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

Natural Fertilizer for Banana Trees in Tamil:

Natural Fertilizer for Banana Trees in Tamil

பொதுவாக வாழைப்பழம் என்றால் மிக மிக பிடிக்கும். அதனால் அனைவருமே வாழைமரத்தை வளர்ப்பார்கள். ஆனால் அப்படி நாம் மிக மிக விரும்பி வளர்க்கும் வாழைமரத்தில் காய்கள் காய்க்கவில்லை என்றால் மிக மிக கஷ்டமாக இருக்கும்.

அதனால் தான் இயற்கையான முறையில் உங்க வீட்டின் வாழைமரத்திலும் குலை தள்ளி, தள்ளிய குலை பெருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. காபி தூள் – 1 கைப்பிடி அளவு
  2. மாட்டு சாணம் – 1 கிலோ 
  3. காய்கறி கழிவுகள் – 2 கைப்பிடி அளவு
  4. தண்ணீர் – 4 லிட்டர் 

நீண்ட நாட்களாக காய்க்காத நெல்லிக்காய் மரத்தில் கூட அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு மற்றும் 4 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மாட்டு சாணத்தை கலக்கவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கிலோ மாட்டு சாணத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

காய்கறி கழிவுகளை சேர்க்கவும்:

அடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவுகளை சேர்த்து கொள்ளுங்கள். இதனை நன்கு மூடி இரண்டு முதல் மூன்று நாட்கள் அப்படியே விடுங்கள்.

பயன்படுத்தும் முறை:

Best fertilizer for banana plants in tamil

அதன் பிறகு இதனுடன் 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து உங்களது வாழைமரத்தின் வேரை சுற்றி குழி பறித்து ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை வாரம் இருமுறை அல்லது மூன்றுமுறை என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் வாழைமரத்தில் விரைவில் குலை தழுவதையும் காய்கள் அனைத்தும் பெருகுவதையும் நீங்களே காணலாம்.

மாமரத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த கரைசலை மட்டும் கொடுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement