பூக்காத செம்பருத்தி பூச்செடியில் கூட அதிக அளவு பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Advertisement

Homemade Fertilizer for Hibiscus Plant in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதில் அதிக  ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த செம்பருத்தி பூச்செடியும் ஒன்று. ஏனென்றால் இந்த செம்பருத்தி பூவினால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது. அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் செம்பருத்தி பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். இதுபோல உங்க வீட்டில் உள்ள செம்பருத்தி பூச்செடியிலும் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் செம்பருத்தி பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

உங்க வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்கதண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்

Natural Fertilizer for Hibiscus Plant in Tamil:

Natural Fertilizer for Hibiscus Plant in Tamil

பொதுவாக அனைவரின் வீட்டிலேயும் இருக்கும் ஒரு பூச்செடி என்றால் இந்த செம்பருத்தி பூச்செடி தான். ஏனென்றால் இதனால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது.

அப்படி அனைவராலும் விரும்பி வளர்க்கப்படும் செம்பருத்தி பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கே காணலாம் வாங்க.

  1. சாதம் வடித்த தண்ணீர் – 1 கப் 
  2. வெந்தயம் – 50 கிராம் 
  3. வேர்க்கடலை – 50 கிராம் 
  4. தண்ணீர் – 10 லிட்டர் 

உங்க வீட்டில் உள்ள கொய்யா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்கதண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்

மூடிபோட்ட பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் சாதம் வடித்த தண்ணீரை 1 மூடிபோட்ட பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 50 கிராம் வெந்தயம் மற்றும் 50 கிராம் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து இரண்டு முதல் மூன்று நாட்கள் அப்படியே ஊறவிடுங்கள்.

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

இரண்டு முதல் மூன்று நாட்கள் கழித்து நாம் ஊறவைத்திருந்த 1 கப் சாதம் வடித்த தண்ணீரை, 50 கிராம் வெந்தயம் மற்றும் 50 கிராம் வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள்:

பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் தயாரித்து வைத்துள்ள பசையை சேர்த்து அதனுடன் 10 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதில் இருந்து 1 கப் மட்டும் எடுத்து உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி பூச்செடியின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் செம்பருத்தி பூச்செடி கொத்து கொத்தாக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

அதேபோல் இதனை அனைத்து பூச்செடிகளும் மற்றும் செடிகளுக்கும் ஊற்றலாம்.

உங்க வீட்டில் உள்ள பன்னீர் ரோஜா செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க தண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement