வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்..!

Updated On: July 24, 2023 7:53 AM
Follow Us:
Homemade Fertilizer for Jackfruit Tree in Tamil
---Advertisement---
Advertisement

Homemade Fertilizer for Jackfruit Tree in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பலாபழ மரம் பலரது வீட்டில் வளர்க்கிறார்கள். ஏனென்றால், இது முக்கனிகளில் ஒன்று ஆகும். மேலும் இதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால் சிலரது வீட்டில் ரொம்ப நாட்களாக பலாபழ மரம் இருக்கும். ஆனால் அதிகமாக பழம் காய்கள் காய்த்திருக்காது. இன்னும் ஒரு சிலரது வீட்டில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் அதிகமாக இருக்கும் ஆனால் காய்களே காய்திருக்காது. இப்படி உங்க வீட்டில் உள்ள பலாபழ மரத்திலேயும் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் பலாபழ மரத்தில் அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

நீண்ட நாட்களாக காய்க்காத நெல்லிக்காய் மரத்தில் கூட அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

Natural Fertilizer for Jackfruit Tree in Tamil:

Natural Fertilizer for Jackfruit Tree in Tamil

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த பலாப்பழம் மிக மிக பிடிக்கும். ஏனென்றால் இதில் உள்ள பழம் மிகவும் சுவையாகவும் அதிக மருத்துவ குணங்களை கொண்டதாக இருக்கும்.

அதனால் அனைவருமே தங்களின் வீட்டில் பலாபழ மரத்தை விரும்பி வளர்ப்பார்கள். அப்படி நாம் அனைவரும் மிகவும் விரும்பி நமது வீட்டில் வளர்க்கும் பலாபழ மரத்தில் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் வருத்தப்படும்.

அதனால் நமது வீட்டில் உள்ள பலாபழ மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

  1. ஆட்டு சாணம் – 1/2 கிலோ
  2. மாட்டு சாணம் – 1 கிலோ
  3. கோழிக்கழிவு – 1/2 கிலோ
  4. கடலை புண்ணாக்கு – 1 கிலோ
  5. வேப்பம் புண்ணாக்கு – 1 கிலோ
  6. மர சாம்பல் – 1 கிலோ
  7. தண்ணீர் – தேவையான அளவு

மாமரத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த கரைசலை மட்டும் கொடுங்கள் போதும்

பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

Fertilizer for Jackfruit Tree in Tamil

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கிலோ ஆட்டு சாணம், 1 கிலோ மாட்டு சாணம் மற்றும் 1/2 கிலோ கோழிக்கழிவு ஆகியவற்றை சேர்த்து ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்குமாறு கலந்து கொள்ளுங்கள்.

கடலை புண்ணாக்கிணை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கிலோ கடலை புண்ணாக்கிணை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கிலோ அளவு வேப்பம் புண்ணாக்கிணையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

காய்க்கவே காய்க்காத முருங்கை மரத்தில் கூட அதிக காய்க்கள் காய்க்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

மர சாம்பலை கலக்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்திருந்த 1 கிலோ மர சாம்பலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

தண்ணீரை ஊற்றவும்:

இறுதியாக இவையெல்லாம் நன்கு மூழ்கின்ற அளவிற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அப்படியே விடுங்கள். அதன் பிறகு இதனை உங்கள் வீட்டில் உள்ள பலாபழ மரத்தின் வேர்களை சுற்றி குழி பறித்து அதில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால் காய்க்கவே காய்க்காத பலாபழ மரத்தில் கூட கொத்து கொத்தாக காய்கள் காய்க்கும்.

தென்னை மரத்தின் குரும்பை மற்றும் பூக்கள் கொட்டுவதை தடுக்க இதை செய்யுங்க போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Paneer Rose Plant Growing Tips

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil

இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடி தளதளன்னு வளர இந்த தண்ணீர் போதும்..!

summer care of rose plant in tamil

வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!

லிச்சி பழம் சாகுபடி முறை மற்றும் லிச்சி பழம் நன்மைகள்..! (Litchi Cultivation / Litchi Fruit Benefits)

வெள்ளரிக்காய் சாகுபடி

குளிர்ச்சியை தரும் வெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

How To Protect Plants From Heat in Tamil

வெயில் காலத்தில் மாடித்தோட்டத்தை பராமரிக்கும் முறை..!

Kaththirikkai Sedi Athigam Kaikka Tips in Tamil

கத்திரிக்காய் செடி தாறுமாறாக காய்கள் காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் போதும்..!

how to plant hibiscus from seeds in tamil

விதை மூலம் செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி

Tulsi Plant Fertilizer Homemade in Tamil

இந்த உரத்தை போட்டால் காய்ந்த துளசி செடி கூட ஒரே வாரத்தில் தளதளவென்று செழித்து வளரும்.!