இதை மட்டும் ஊற்றினால்..! நீண்ட நாட்களாக பூக்காத மல்லிப்பூ செடியில் கூட கொத்து கொத்தாக பூக்கள் பூக்கும்..!

Advertisement

Homemade Fertilizer for Jasmine Plant in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தாவரங்கள் வளர்ப்பதில் அதிக  ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நம்மில் பலராலும் விரும்பி வளர்க்கப்படும் பூச்செடிகளில் ஒன்று தான் மல்லிகை பூச்செடி. ஏனென்றால் பூக்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததும் மிகவும் வாசம் மிக்கதும் தான் இந்த மல்லிகை . அதனால் இதனை அனைவருக்கும் மிக மிக பிடிக்கும். அப்படி மல்லிகை பூச்செடியை விரும்பி வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது மல்லிகை பூச்செடியை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன். ஆனால் எனது பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

கொய்யா மரத்தில் பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

Natural Fertilizer for Jasmine Plant in Tamil:

Banana Peel Fertilizer for Jasmine in Tamil

மல்லிகை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் சில குறிப்பிகளை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

குறிப்பு – 1 

முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. வாழைப் பழத்தோல்- 4
  2. முட்டை ஓடு – 5
  3. எப்சோம் உப்பு – 1 டீஸ்பூன் 
  4. தண்ணீர் – 5 லிட்டர் 

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 வாழைப் பழ தோல்களையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி காய வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

அதேபோல் நாம் எடுத்து வைத்துள்ள 5  முட்டை ஓடுகளையும்நிழலில் காய வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 1 டீஸ்பூன் எப்சோம் உப்பினை சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் வாழைப்பழத்தோல் பொடி மற்றும் 1 டீஸ்பூன் முட்டை ஓடு பொடி இரண்டினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மாதுளை மரத்தில் உள்ள பிஞ்சுகள் அனைத்தும் காய்களாக மாற இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

பயன்படுத்தும் முறை:

பிறகு இந்த கலவையினை 5 லிட்டர் தண்ணீருடன் கலந்து1 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பின்னர் இதனை எடுத்து உங்களின் மல்லிகை பூச்செடிகளின் வேர்களில் ஊற்றுங்கள்.

இதனை வாரத்திற்கு இருமுறை என்று தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் மல்லிகை பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூப்பதை நீங்களே காணலாம்.

Best Organic Fertilizer for Jasmine Plant in Tamil:

Best Organic Fertilizer for Jasmine Plant in Tamil

குறிப்பு – 2

முதலில் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

  1. தேங்காய் பால் – 1 லிட்டர் 
  2. புளித்த மோர் – 1 லிட்டர் 
  3. பெருங்காயத்தூள் – 4 டேபிள் ஸ்பூன் 
  4. கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
  5. தண்ணீர் – தேவையான அளவு 

வாழைத்தார்களில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் தேங்காய் பால், 1 லிட்டர் புளித்த மோர், 4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை ஒரு வாரத்திற்கு அப்படியே இருக்க விடுங்கள். அவ்வப்போது லேசாக கலந்து விடுங்கள்.

பயன்படுத்தும் முறை:

ஒரு வாரத்திற்கு பிறகு இதிலிருந்து 1 டம்ளர் எடுத்து அதில் 9 டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து உங்களின் மல்லிகை பூச்செடிகளின் வேர்களில் ஊற்றுங்கள்.

இதனை வாரத்திற்கு இருமுறை அல்லது மூன்று என்று இதனை தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் மல்லிகை பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூப்பதை நீங்களே காணலாம்.

பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement