Homemade Fertilizer for Lady Finger Plant in Tamil
பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த உலகில் நம்முடன் இணைந்து வாழ்கின்ற விலங்குகள் மற்றும் தாவர வகைகளின் மீது நமக்கு அதீத ஆசை மற்றும் பாசம் உள்ளது அதனால் நாம் அனைவருமே நமது வீடுகளில் சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில் நமக்கு பிடித்த மற்றும் நமக்கு பயனுள்ள பலவகையான தாவரங்களை வளர்த்து வருகின்றோம். அப்படி நாம் அனைவரின் வீட்டில் உள்ள தோட்டங்களில் கண்டிப்பாக இடம் பெற்றுள்ள ஒரு செடி என்றால் அது வெண்டைக்காய் செடி தான். அப்படி நாம் மிகவும் விருப்பப்பட்டு வளர்க்கும் வெண்டைக்காய் செடியில் ஏதாவது ஒரு பூச்சி தாக்குதல் ஏற்பட்டு அது சரியாக காய்க்கவில்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் இன்று வெண்டைக்காய் செடியில் உள்ள பூச்சித்தாக்குதலை நீக்கி வேகமாக வளர்ந்து அதிக அளவு காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெண்டைக்காய் செடி வளர்ப்பது எப்படி..?
நாம் அனைவருக்குமே வெண்டைக்காய் என்றால் மிக மிக பிடித்த காய் ஆகும். அதனால் அதனை அனைவருமே நமது வீடுகளில் விரும்பி வளர்ப்போம். ஆனால் நமது வீடுகளில் உள்ள வெண்டைக்காய் செடி வேகமாக வளராமல் மற்றும் காய்கள் அதிகமாக காய்க்காமலும் இருப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது.
அதாவது நமது வெண்டிக்காய் செடி அதிக காய்கள் காய்க்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் என்றால் அது பூச்சி தாக்குதல் தான். இப்பொழுது நமது செடியில் ஏதாவது ஒரு பாகத்தில் பூச்சி தாக்கியுள்ளது என்றால் அதனை முதலில் நறுக்கி விட வேண்டும்.
அதன் பிறகு நன்கு உரமிட வேண்டும். அது என்ன உரம் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வெங்காய தோல் – 2 கைப்பிடி அளவு
- பூண்டு தோல் – 2 கைப்பிடி அளவு
- கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
- வேப்பம் புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
பூக்காத மல்லிகை பூச்செடியும் தாறுமாறாக பூக்க இந்த ஒரு கரைசல் போதும்
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வெங்காய தோல் மற்றும் 2 கைப்பிடி அளவு பூண்டு தோலினை சேர்த்து நன்கு பொடி பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு மற்றும் 1 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
பின்னர் இதனை நேரடியாக உங்கள் செடியின் வேர்களில் போடலாம் அப்படி இல்லையென்றால் ஒரு வாரம் இதனை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை வடிகட்டியும் ஊற்றலாம்.
இதன் மூலம் உங்களின் வெண்டைக்காய் செடி அதிக அளவு காய்களை காய்க்க தொடங்கும்.
ஒரே ஒரு பீர்க்கங்காய் போதும் பூக்காத முல்லை செடியிலும் 1000 பூக்கள் பூக்கும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |