வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே ஒரு பீர்க்கங்காய் போதும் பூக்காத முல்லை செடியிலும் 1000 பூக்கள் பூக்கும்..!

Updated On: November 7, 2023 10:05 AM
Follow Us:
Homemade Fertilizer for Mullai Plant in Tamil
---Advertisement---
Advertisement

Homemade Fertilizer for Mullai Plant in Tamil

இன்றைய சூழலில் நாம் அனைவரின் வீட்டிலேயும் பலவகையான காய், கனி மற்றும் பூச்செடிகளை மிக மிக விரும்பி வளர்த்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக பெண்கள் பொதுவாக தங்களது வீடுகளில் மிக மிக அதிகம் விரும்பி வளர்க்கும் செடிகள் என்றால் அது பூச்செடிகள் தான். அப்படி அவர்கள் மிகவும் விரும்பி வளர்க்கும் பலவகையான பூச்செடிகளில் ஒன்று தான் இந்த முல்லை பூச்செடிகளும். பொதுவாக இந்த முல்லை பூச்செடிகளில் சில காலநிலைகளில் அதிக அளவு பூக்கள் பூத்து குலுங்கும். ஆனால் சில காலங்களில் அவ்வளவாக பூக்களே பூக்காது. ஏன் ஒரு சில முல்லை பூச்செடிகள் நீண்ட நாட்களுக்கு பூக்களே பூக்காமல் நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் நமது வீடுகளில் உள்ள முல்லை பூச்செடிகளை அதிக பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Grow Mullai Plant in Tamil:

How To Grow Mullai Plant in Tamil

நாம் அனைவருக்குமே பூச்செடிகள் என்றால் மிக மிக அதிக அளவு பிடிக்கும். அதனால் நாம் அனைவருமே நமது வீடுகளில் பலவகையான பூச்செடிகளை மிகவும் விரும்பி வளர்ப்போம்.

அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் பலவகையான பூச்செடிகளில் ஒன்றான முல்லை பூச்செடி அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. பீர்கங்காய் தோல் – 1 கைப்பிடி அளவு 
  2. பப்பாளி தோல் – 1 கைப்பிடி அளவு 
  3. வாழைப்பழத்தோல் – 2 
  4. வெங்காய தோல் – 1 கைப்பிடி அளவு 
  5. பூண்டு தோல் – 1 கைப்பிடி அளவு 
  6. பழைய சோறு  – 1 கப் 
  7. அரிசி கழுவிய தண்ணீர் – 2 கப்

செம்பருத்தி செடியில் உள்ள அனைத்து மொட்டுகளும் பூக்களாக மாற இதை மாட்டு ஊற்றுங்க போதும்

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், 1 கப் பழைய சோறு, 1 கைப்பிடி அளவு பூண்டு தோல் மற்றும் 1 கைப்பிடி அளவு வெங்காய தோல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு பீர்கங்காய் தோல், 1 கைப்பிடி அளவு பப்பாளி தோல் மற்றும் 2 வாழைப்பழத்தோல் ஆகியவற்றை சேர்த்து நாகு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனை நாம் முன்னரே தயாரித்து வைத்துள்ள கலவையுடன் சேர்த்து ஒரு வாரத்திற்கு நன்கு ஊறவிடுங்கள். பின்னர் இதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி அதனுடன் இரண்டு அல்லது மூன்று மடங்கு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து உங்களின் முல்லை பூச்செடிக்கு ஊற்றுங்கள்.

இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை ஊற்றி வருவதன் மூலம் உங்களின் முல்லை பூச்செடிகள் அதிக பூக்கள் பூக்க தொடங்குவதை நீங்களே காணலாம்.

காய்க்காத கத்திரிக்காய் செடியும் கொத்து கொத்தாக காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்க

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now