வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாதுளை மரத்தில் உள்ள பிஞ்சுகள் அனைத்தும் காய்களாக மாற இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்..!

Updated On: August 9, 2023 12:25 PM
Follow Us:
Homemade Fertilizer for Pomegranate Tree in Tamil
---Advertisement---
Advertisement

Homemade Fertilizer for Pomegranate Tree in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதாவது அனைவருமே தங்களுக்கு தேவையான அனைத்து வகையான செடிகளையும் தங்களது வீட்டில் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.  அதிலும் குறிப்பாக மாதுளைப்பழ மரத்தை பலர் தங்களது வீட்டில் வளர்க்கிறார்கள். ஏனென்றால், அதில் அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. அதாவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, உடல் எடை குறைய மாதுளைப்பழ உதவுகின்றது. சிலரது வீட்டில் நீண்ட நாட்களாக மாதுளைப்பழ மரம் இருக்கும். ஆனால் மாதுளைப்பழம் அதிகமாக காய்த்திருக்காது. இன்னும் ஒரு சிலரது வீட்டில் பூக்கள் அதிகமாக பூக்கும் ஆனால் காய்களே காய்திருக்காது. இப்படி உங்க வீட்டில் உள்ள மாதுளைப்பழ மரத்திலேயும் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் மாதுளைப்பழ மரத்தில் அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

வாழைத்தார்களில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

Natural Fertilizer for Pomegranate Tree in Tamil:

Natural Fertilizer for Pomegranate Tree in Tamil

இயற்கையான முறையில் உங்க வீட்டில் இருக்கும் மாதுளைப்பழ மரத்தில் அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முதலில் இந்த குறிப்பிற்கு தேவியன் பொருட்களை பார்க்கலாம் வாங்க.

  1. புளித்த மோர் – 1 கப் 
  2. தேங்காய் பால் – 1 கப் 
  3. பெருங்காயத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  4. கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு 
  5. வேப்பம் புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு 
  6. வேப்ப எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  7. தண்ணீர் – 4 லிட்டர் 

பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் புளித்த மோர், 1 கப் தேங்காய் பால் மற்றும் 4 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பெருங்காயத்தூளினை கலந்து கொள்ளவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூளினையும் கலந்து கொள்ளுங்கள்.

கடலை புண்ணாக்கிணை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கிணை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

நீண்ட நாட்களாக காய்க்காத நெல்லிக்காய் மரத்தில் கூட அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கிணையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வேப்ப எண்ணெய்யை கலக்கவும்:

Best natural fertilizer for pomegranate tree in tamil

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் வேப்ப எண்ணெய்யை கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாரம் அப்படியே விடுங்கள். அதன் பிறகு இதனுடன் 5 மடங்கு தண்ணீரை கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் வீட்டின் மாதுளை மரத்துக்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை ஊற்றுங்கள். அதன் பிறகு பாருங்கள் நீண்ட நாட்களாக காய்க்காமல் இருந்த மாதுளை மரம் கூட கொத்து கொத்தாக காய்க்கும்.

மாமரத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த கரைசலை மட்டும் கொடுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Paneer Rose Plant Growing Tips

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil

இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடி தளதளன்னு வளர இந்த தண்ணீர் போதும்..!

summer care of rose plant in tamil

வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!

லிச்சி பழம் சாகுபடி முறை மற்றும் லிச்சி பழம் நன்மைகள்..! (Litchi Cultivation / Litchi Fruit Benefits)

வெள்ளரிக்காய் சாகுபடி

குளிர்ச்சியை தரும் வெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

How To Protect Plants From Heat in Tamil

வெயில் காலத்தில் மாடித்தோட்டத்தை பராமரிக்கும் முறை..!

Kaththirikkai Sedi Athigam Kaikka Tips in Tamil

கத்திரிக்காய் செடி தாறுமாறாக காய்கள் காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் போதும்..!

how to plant hibiscus from seeds in tamil

விதை மூலம் செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி

Tulsi Plant Fertilizer Homemade in Tamil

இந்த உரத்தை போட்டால் காய்ந்த துளசி செடி கூட ஒரே வாரத்தில் தளதளவென்று செழித்து வளரும்.!