வாடிய ரோஜா செடி கூட துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை மட்டும் உரமாக கொடுங்கள்.!

Advertisement

Homemade Fertilizer For Roses in Tamil

அனைவருமே வீட்டில் ரோஜா செடி வளர்த்து வருவோம். ஆனால் ஒரு சில வீடுகளில்  பூச்சி தாக்குதல் காரணமாக ரோஜா செடிகள் வளராமலும் பட்டுப்போயும் இருக்கும். அப்படி இருக்கும் செடிகள் நன்கு துளிர்விட்டு மொட்டுகள் வைக்க நாம் சில பொருட்களை உரமாக கொடுக்க வேண்டும். எனவே அப்படி ரோஜா செடி அதிகமாக பூக்க கொடுக்கக்கூடிய பொருட்களில் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதாவது, வாடிய ரோஜா செடியிலும் மொட்டுகள் வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாடிய மற்றும் பூச்சி உள்ள ரோஜா செடியில் அதிக மொட்டுகள் வைக்க உரம்:

ரோஜா செடி அதிகம் பூக்க

முதலில் கற்றாழை செடியில் நன்கு சதைப்பற்றுள்ள கற்றாழையாக பார்த்து நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது கற்றாழையின் இருபுறமும் உள்ள முட்கள் பகுதியை வெட்டி நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு, அதன் உட்பகுதியில் உள்ள சதையினை மட்டும் வெட்டி எடுத்து கொள்ளுங்கள். அடுத்து, இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ள்ளுங்கள்.

கற்றாழை செடி வேகமாகவும் அதிக சதை வைத்தும் வளர இந்த உரத்தை கொடுங்கள்..!

rose plant fertilizer in tamil

இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ரோஜா செடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தண்ணீரை சேர்த்து கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை வாடிய நிலையில் இருக்கும் ரோஜா செடியின் தண்டு பகுதியில் நன்கு படும்படி தெளித்து விட வேண்டும். மேலும், ரோஜா செடியின் மேற்பகுதியிலும் நன்கு படும்படி தெளித்து விட வேண்டும்.

இவ்வாறு நீங்கள் மாதத்திற்கு இரண்டு முறை ரோஜா செடிக்கு கொடுத்து வருவதன் மூலம் வாடிய ரோஜா செடி, பூச்சி தாக்கிய ரோஜா செடி போன்றவை நன்கு துளிர்விட ஆரமித்து மொட்டுக்கள் வைக்க தொடங்கும்.

கத்தரிக்காய் செடி வருடம் முழுவதும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு பொருள் போதும்..!

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement