வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தக்காளி செடியில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Updated On: October 17, 2023 12:14 PM
Follow Us:
Homemade Fertilizer for Tomato Plants in Tamil
---Advertisement---
Advertisement

Homemade Fertilizer for Tomato Plants in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களின் வீட்டில் அழகுக்காகவோ தேவைக்காகவோ பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி பலரும் விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளில் ஒன்று தான் தக்காளி செடி. அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் தக்காளி செடியில் அதிக காய்கள் காய்க்க வில்லையே என்று கவலைபடுபவர்களுக்காக தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களின் செடிகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தக்காளி செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => கத்திரிக்காய் செடியில் கொத்து கொத்தாக காய் காய்க்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

Tips to Get More Fruit from Tomato Plant in Tamil:

Tips to Get More Fruit from Tomato Plant in Tamil

தக்காளி செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. நன்கு புளித்த மோர் – 1 லிட்டர் 
  2. பெருங்காய தூள் – 4 டேபிள் ஸ்பூன் 
  3. தண்ணீர் – 4 லிட்டர் 
  4. கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
  5. வேப்பம் புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் நன்கு புளித்த மோரை ஊற்றி அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் தண்ணீரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பெருங்காயத்தூளினை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => செடிகளில் உள்ள மாவுப்பூச்சியை நிரந்தரமாக போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்

கடலை புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடனே 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கினையும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாரத்திற்கு அப்படியே விடுங்கள்.

அதற்கு பிறகு இதனை உங்களின் தக்காளி செடிகளுக்கு ஊற்றுங்கள். இதனை தொடர்ந்து  ஊற்றி வருவதன் மூலம் உங்களின் தக்காளி செடியில் அதிக காய்கள் காய்ப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இதை மட்டும் செய்யுங்கள்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now