ரோஜா செடியில் பூக்கள் பெரியதாக பூக்க
இன்றைய கால கட்டத்தில் அனைவருமே வீட்டு தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடுடன் காணப்படுகின்றனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த ரோஜா பூச்செடியும் ஒன்று. நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா செடியில் பூக்கும் பூக்கள் சிறிதாக பூக்கின்றதா, இல்லை உங்கள் செடி பூக்கவில்லையா, பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடியில் பெரியதாக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன்பெறுங்கள்…
ரோஜா செடியில் பெரிய பூக்களுக்கு:
ரோஜாக்களுக்கு வெப்பமான வானிலை மற்றும் போதுமான சூரிய ஒளி தேவை. நல்ல காற்று சுழற்சியுடன் தினமும் 3-5 மணி நேரம் முழு பகல் வெளிச்சம் இருக்கும் இடத்தில் உங்கள் செடியை வையுங்கள்.
ரோஜாக்களுக்கு தொடர்ந்து ஈரமானமற்றும் சத்தான மண் தேவைப்படுகிறது. ரோஜா செடியின் மேல் மண் சிறிது வறண்டதாக நீங்கள் உணரும்போது அதிகமாக தண்ணீர் ஊற்றுங்கள்.
காய்ந்த ரோஜா செடி கூட துளிர் விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..
பெரிய அளவிலான ரோஜாக்களுக்கு நீங்கள் ஹைப்ரிட் டீ மற்றும் ஃப்ளோரிபூண்டா வகை ரோஜாகளை தேர்வுசெய்யுங்கள்.
ரோஜா செடியை கத்தரிக்கும் போது ரோஜாக்களில் புதிய வளர்ச்சியை பெருகின்றது. இவ்வாறு செய்வதால் இறந்த மற்றும் நோயுற்ற கிளைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றிவிடலாம்.
மண்ணின் pH மதிப்பு 6-6.5 உடன் மிதமான வளமான செம்மண் ரோஜாவளர்ச்சிக்கு சிறந்தது.
ரோஜா செடியின் அடிப்பகுதியில் காய்ந்த இலைகள் மற்றும் காய் மற்றும் கனிகளின் கழிவுகளை உரமாக வைப்பதால் வளர்ச்சி அதிகரிக்கும்.
ரோஜா செடியில் பெரியதாக பூக்கள் பூக்க இதை மட்டும் செய்தால் போதும்
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |