தென்னை மரம் சீக்கிரம் வளர
வீட்டிற்கு வீடு மரம் இல்லாமல் இருக்காது. ஏதோ ஒரு மரம் கண்டிப்பாக வளர்ப்பார்கள். அதில் பெரும்பாலானவர்களின் வீட்டில் தென்னை மரம் கண்டிப்பாக இருக்கும். தென்னை மரத்தை வளர்ப்பதால் தேங்காய், இளநீர், வார்கொள் போன்றவை கிடைக்கிறது. அதிலும் முக்கியமாக வீட்டிற்கு பயன்படுத்துவதற்கு தேங்காய் வேண்டுமென்றே தென்னை மரத்தை வளர்க்கிறார்கள். ஏனென்றால் ஒரு தேங்காயின் விலை 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிலரது வீட்டில் 5 வருட தென்னை பிள்ளை என்று வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் அதிலிருந்து கொஞ்சம் கூட வளர்ச்சி இருக்காது. பக்கத்து வீட்டில் பார்த்தால் வைத்த உடனே தென்னை மரம் வளர்ந்து விடும். என்னே தான் செய்கிறார்கள் அவர்கள் வீட்டில் மட்டும் தென்னை பிள்ளை வளர்ந்து விட்டது என்று நினைப்பார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் தென்னை மரம் சீக்கிரம் வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
தென்னை மரம் சீக்கிரம் வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்:
முதலில் தென்னை மரத்தை வெயில் உள்ள இடத்தில் தான் வைக்க வேண்டும். அடுத்து தென்னை மரம் வைப்பதற்கு குழியானது நன்கு ஆழமாக இருக்க வேண்டும். அந்த குழியில் உரமாக ஆட்டு சாணம், மாட்டு சாணம் போன்றவற்றை போட வேண்டும். இது அப்படியே இரண்டு நாட்களுக்கு அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு தான் தென்னை பிள்ளையை நட வேண்டும்.
தினமும் தென்னை பிள்ளைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். நீங்கள் வைத்துள்ள தென்னை மரத்தை சுற்றி குழி நோண்ட வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஊற்றுகின்ற தண்ணீரானது தென்னை பிள்ளையில் நிற்பதற்காக அந்த குழி பறிக்கிறோம்.
நீங்கள் தென்னை மரத்தை சுற்றி நோண்டியுள்ள குழியில் உப்பை சுற்றி போட வேண்டும். இல்லையென்றால் தொழு உரம் அல்லது மண்புழு உரம் போட வேண்டும்.
மாதத்தில் ஒரு நாள் இருக்கின்ற குழியை மறுபடியும் குழி பறித்து உரத்தை போட வேண்டும். ஏனென்றால் நீங்கள் போட்ட ஓரம் அப்படியே செட் ஆகிருக்கும். அதனால் தான் மாதத்தில் ஒரு நாள் குழி பறித்து தண்ணீர் ஊற்றுகிறோம். எப்பொழுதும் தென்னை பிள்ளையில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அப்போது தான் தென்னை பிள்ளை சீக்கிரமாக வளரும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |