1 கப் நாட்டுச்சர்க்கரை போதும் பூக்காத முல்லை பூச்செடியும் தாறுமாறாக பூக்கள் பூக்கும்..!

Advertisement

How Grow Faster Mullai Poo Plant in Tamil

பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த உலகில் நம்முடன் இணைந்து வாழ்கின்ற விலங்குகள் மற்றும் தாவர வகைகளின் மீது நமக்கு அதீத ஆசை மற்றும் பாசம் உள்ளது அதனால் நாம் அனைவருமே நமது வீடுகளில் சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில் நமக்கு பிடித்த மற்றும் நமக்கு பயனுள்ள பலவகையான தாவரங்களை வளர்த்து வருகின்றோம். அப்படி நாம் அனைவரின் வீட்டில் உள்ள தோட்டங்களில் கண்டிப்பாக இடம் பெற்றுள்ள ஒரு செடி என்றால் அது முல்லை பூச்செடி தான். அப்படி நாம் மிகவும் விருப்பப்பட்டு வளர்க்கும் முல்லை பூச்செடியில் ஏதாவது ஒரு பூச்சி தாக்குதல் ஏற்பட்டு அது சரியாக பூக்கவில்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் இன்று முல்லை பூச்செடியில் உள்ள பூச்சித்தாக்குதலை நீக்கி வேகமாக வளர்ந்து அதிக அளவு காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முல்லை பூ செடி வளர்ப்பு:

முல்லை பூ செடி வளர்ப்பு

நமது வீடுகளில் உள்ள தோட்டங்களில் என்னதான் பலவகையான காய்கள் மற்றும் கனிகளின் செடிகளை வளர்த்தாலும் ஒரு சில பூச்செடிகளையாவது மிகவும் விரும்பி வளர்ப்போம்.

அப்படி நாம் விரும்பி வளர்க்கும் செடிகளில் ஒன்று தான் இந்த முல்லை பூச்செடி. நமது மனம் கவர்ந்த இந்த முல்லை பூச்செடிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அது அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கஷ்டப்படும்.

அதனால் தான் அதனை அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. பழைய சாதம் – 1 கப் 
  2. நாட்டு சர்க்கரை – 1 கப் ( 100 கிராம் )
  3. தண்ணீர் – 10 லிட்டர்

உங்க வீட்டில் உள்ள December பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க டிப்ஸ்

உரம் தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு மூடிபோட்ட பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பழைய சாதத்தை சேர்த்து நன்கு மூடி இரண்டு முதல் மூன்று நாட்கள் அப்படியே விடுங்கள்.

இதனால் அது நன்கு நொதித்திருக்கும். அதன் பிறகு அதனுடன் 1 கப் ( 100 கிராம் ) நாட்டு சர்க்கரையை சேர்த்து ஒரு வாரத்திற்கு அப்படியே இருக்கவிடுங்கள்.

உரம் இடும் முறை:

ஒரு வாரத்திற்கு பிறகு அதிலிருந்து இரண்டு கரண்டி எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் 10 லிட்டர் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து உங்களது முல்லை பூச்செடியின் வேர்களில் ஊற்றுங்கள்.

இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் முல்லை பூச்செடி அதிக அளவு பூக்கள் பூக்க தொடங்கும்.

வெண்டைக்காய் செடி வேகமாக வளர்ந்து அதிக காய்கள் காய்க்க இதை ட்ரை பண்ணுங்க

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement