வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்ககிட்ட 200 குழி இடம் இருக்கா.! அப்போ நீங்க 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

Updated On: December 20, 2023 5:58 PM
Follow Us:
How much does it cost to cultivation in 200 square feet in tamil
---Advertisement---
Advertisement

200 குழி இடம் இருந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம்

நாம் வாழும் இந்த உலகில் உள்ள தொழில்களிலேயே மிகவும் புனிதமான மற்றும் மிகவும் கஷ்டமான தொழில் தான் விவசாயம். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் படித்திருந்தாலும் சரி, படிக்காமல் இருந்தாலும் சரி விவசாயம் தான் செய்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்வதற்கு மற்றவர்களிடம் சென்று வேலை பார்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் அவ்வளவு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றே கூறவேண்டும். இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு இந்த விவசாயத்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை புரிய வைத்துவிட்டால் அவர்களே விவசாயத்தை காத்து செழிக்க வைத்து விடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் 200 குழி இடம் இருந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உழவு:

நீங்கள் 200 குழியில் நடவு செய்வதற்கு இரண்டு தடவை உழவு செய்ய வேண்டும். அப்போது தான் அதில் உள்ள செடிகள் எல்லாம் அழிந்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். ஒரு நடை உழவு செய்வதற்கு 500 ரூபாய் என்றால் இரண்டு தடவை உழவு செய்வதற்கு 1000 ரூபாய் தேவைப்படும்.

நாத்து:

200 குழியில் நடுவதற்கு 6 கட்டு நாத்து தேவைப்படும். ஒரு கட்டு நாத்தில் 100 புடி நாத்து இருக்கும். ஒரு கட்டு நாத்தின் விலை 500 ரூபாய் அப்போ 6 கட்டின் நாத்தின் விலை 3000 ரூபாய் தேவைப்படும். அதுவே மிசின் நடவு செய்தால் 2 கட்டு நாத்து போதுமானது.

200 குழி வயலில் நடவு செய்வதற்கு 10 ஆட்கள் வேண்டும். ஒரு ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 2000 ரூபாய் செலவாகும்.

களை:

200 குழி இடம் இருந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம்

நடவு செய்து 1 மாதத்தில் களை எடுக்க வேண்டும். அதற்கு 10 ஆட்கள் தேவைப்படும். 1 ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 10 ஆட்களுக்கு 2000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஒரு களை எடுத்த பிறகு அடுத்த 45-வது நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கும் 10 ஆட்கள் தேவைப்படும். 1 ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 10 ஆட்களுக்கு 2000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.

வீட்டிற்குள்ளேயே தக்காளி செடி ஈசியாக வளர்க்கலாம்..

மருந்து:

நடவு நட்ட 5 நாள் அடி உரம் கொடுக்க வேண்டும். அதற்கு DAP 26 கிலோவும், பொட்டாஷ் 8 கிலோவும் தேவைப்படும். இதனை வாங்குவதற்கு 1200 ரூபாய் செலவாகும்.

அடுத்து 15 வது நாள் தண்ணீர் மருந்து அடிக்க வேண்டும். அதற்கு DAP 30 கிலோவும், யூரியா 12 கிலோவும் தேவைப்படும். இதற்கு 1500 ரூபாய் செலவாகும். அடுத்து 30 வது நாள் தண்ணீர் மருந்து அடிக்க வேண்டியிருக்கும். அதற்கு1500 ரூபாய் செலவாகும்.

இதற்கு இடையில் பூச்சி தொல்லை ஏதும் இருந்தால் அதற்கு தனியாக மருந்து அடிக்க வேண்டியிருக்கும்.

அறுவடை:

200 குழி இடம் இருந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம்

மிசின் வைத்து அறுக்கும் போது 1 மணி நேரத்திற்கு 1500 ரூபாய் செலவாகும். 200 குழியை அறுவடை செய்வதற்கு 1 மணி நேரம் தேவைப்படும். இதற்கு 1500 ரூபாய் தேவைப்படும்.

வருமானம்:

200 குழியில் பயிரிட்டால் 30 மூட்டை கிடைக்கும். இதனை விற்கும் போது நமக்கு 30,000 ரூபாய் வருமானமாக பெறலாம். இந்த விலையானது நாம் விதைக்கப்பட்டிருக்கும் பயிரை பொறுத்து வருமானம் மாறுபடும்.

நீங்கள் 200 குழியில் பயிரிடுவதற்கு 15,700 ரூபாய் செலவாகிறது, ஆனால் வருமானம் 30,000 ரூபாய் அப்போ நமக்கு லாபமே 15,000 ரூபாய் கிடைக்கிறது.

ஜாதி மல்லி வருடம் முழுவதும் பூத்து குலுங்க வெங்காயம் ஒன்று போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now