வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முல்லை செடியில் பூக்கள் பூத்து குலுங்க இதை செய்யுங்க..

Updated On: April 26, 2023 6:02 AM
Follow Us:
how to collect mullein seeds in tamil
---Advertisement---
Advertisement

முல்லை செடி வளர்ப்பது எப்படி.?

வீட்டில் பூச்செடிகள் வளர்ப்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம். இந்த பூச்செடி வளர்க்கும் போது செடிகள் மட்டும் வளர்ந்து பூக்கள் பூக்காமல் இருந்தால் கஷ்டமாக இருக்கும். சில நபர்கள் நான் நன்றாக தான் செடியை பராமரிக்கிறேன் ஆனால் பூக்கள் பூக்கவே மாட்டிக்கிறதுஎன்று நினைப்பார்கள். அதனால் இன்றைய பதிவில் முல்லை செடியில் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

முல்லை செடியில் அதிக பூக்கள் பூக்க:

குச்சியாக இருக்கும் ரோஜா செடி கூட 3 நாட்களில் துளிர்விடும்..! அதற்கு இந்த கரைசல் போதும்..!

மண் கலவை:

how to collect mullein seeds in tamil

செடியை வைப்பதற்கு அகலமான தொட்டியை பயன்படுத்த வேண்டும். தொட்டியில் வைக்கப்படும் மண் சத்தான மண் கலவையாக இருக்க வேண்டும். இதில்  மண்புழு உரம் அல்லது தொழு உரம் சேர்க்க வேண்டும். இந்த உரத்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன் சத்துக்கள் இருப்பதால் செடியை ஆரோக்கியமாக வளர்க்கத்திற்கு உதவியாக இருக்கிறது. இந்த உரத்தை மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.  

காய்கறி கழிவு

மண்புழு உரம் தொழு உரம் கிடைக்கவில்லை என்றால் வீட்டில் தூக்கி எரிய கூடிய காய்கறிகளை ஒரு பாட்டிலில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற விடவும். இந்த தண்ணீரை தினமும் செடிகளுக்கு கொடுத்தாலே பூக்கள் அதிகமாக பூக்கும்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..!

அரசி கழுவிய தண்ணீரை தினமும் செடிக்கு ஊற்ற வேண்டும். மேலும் முட்டை ஓட்டையும் கீழே தூக்கி போடாமல் செடிகளில் போடுங்கள். இந்த உரங்கள் மூலமாக செடியில் மொட்டுகள் அதிகமாக வைப்பதற்கு உதவி செய்கிறது.

செடிகளை நறுக்க வேண்டும்:

செடிகளின் கிளைகளை 6 மாதத்திற்கு ஒரு முறை நறுக்கி விட வேண்டும். அப்போது தான் கிளைகள் அதிகமாக விட்டு மொட்டுகள் அதிகமாக வைக்கும்.

தேமோர் கரைசல்:

தேமோர் கரைசலை வாரத்தில் ஒரு நாள் செடிக்கு தெளிக்க வேண்டும். தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now