உங்க வீட்டு தென்னை மரம் அதிகம் காய்க்க வேண்டுமா.? அப்போ இதை மட்டும் பண்ணுங்கள்.!

Advertisement

Best Fertilizer For Coconut Trees

விவசாயத்தில் அள்ள அள்ள குறையாமல் விளைச்சல் தருவது தென்னைமரம். இருப்பினும், காலத்திற்கு ஏற்றவாறு தென்னை மரத்திற்கு பல்வேறு நோய்கள் வரும். இதனால் தென்னை மரங்கள் அதற்கு தேவையான சத்தினை இழந்து விடும். எனவே, தென்னை மரத்திற்கு சில வகையான உரங்களை இடுவதன் மூலம் தென்னை மரங்களுக்கு தேவையான சத்தினை பெற்று நன்றாக காய்க்க தொடங்கும். இதன் மூலம் அதிக லாபத்தையும் நம்மால் பெறமுடியும். எனவே, தென்னை மரத்திற்கு என்ன வகையான உரங்களை இட வேண்டும் என்பதையும், அதற்கு தென்னை மரத்திற்கு என்னென்ன சத்துக்கள் அவசியம் என்பதையும் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Fertilizers For Coconut Trees in Tamil:

வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தென்னை மரத்திற்கு தொழுவுரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு கலந்த கலவையை இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அதிக விளைச்சலை பெறலாம். அதுமட்டுமில்லாமல், தென்னை மரத்திற்கு இரசாயன உரம் முக்கியமான ஒன்று.

 தென்னை மரத்திற்கு உரம்

இரசாயன உரங்கள்:

இரசாயன உரங்களில் பல வகையான சத்துக்கள் உள்ளது. அதில் முக்கியமான மூன்று சத்துக்கள் என்னெவென்றால் மணிச்சத்து, கந்தகச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து ஆகும். அதில் மிக முக்கியமானது மணிச்சத்து ஆகும். இச்சத்துக்கள் நிறைந்த உரங்களை தென்னை மரத்திற்கு இடுவதன் மூலம் தேங்காய் அதிகமாக காய்க்கும்.

 best fertilizer for coconut trees in tamil

மணிச்சத்து உரங்கள்:

சந்தைகளில் பல வகையான மணிச்சத்து நிறைந்த இரசாயன உரங்கள் உள்ளது. குறிப்பாக சூப்பர் பாஸ்பேட்டில் மணிச்சத்து நிறைந்துள்ளது. இந்த சத்தானது, தென்னை நாற்றில் இருந்து முளைத்து வரும் குருத்தின் பருமனை அதிகரிக்கவும், தென்னன் வேர்கள் பூமியில் ஆழமாக வேரூன்றி நிற்பதற்கும் உதவுகிறது. இதனால், மரத்தின் வளர்ச்சி அதிகரித்து விளைச்சல் பெருகுகிறது.

தென்னை உர மேலாண்மை பற்றிய ஆலோசனைகள்..!

கந்தகச்சத்து உரங்கள்:

கந்தக சத்தானது, கொப்பரை தேங்காயில் எண்ணெயின் அளவு கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. மேலும், தேங்காய் பருப்பு ரப்பார் போன்று ஆகிவிடாமல் கெட்டியாக உருவாகவும் இது உதவுகிறது. எனவே, தென்னை மரத்திற்கு கந்தகச்சத்து நிறைந்த சூப்பர் பாஸ்பேட் உரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சுண்ணாம்புச்சத்து உரங்கள்:

தென்னை மரம் வலிமையாக வளர சுண்ணாம்புச்சத்து மிகவும் முக்கியம். எனவே, தென்னை மரத்திற்கு சுண்ணாம்புச்சத்து நிறைந்த உரங்களை இட வேண்டும். இச்சத்து, மரங்களின் கட்டமைப்பு செல்களின் சுவர்களிலும், வேரின் வளர்ச்சியிலும் சர்க்கரை மற்றும் தனிமங்களை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது தவிர சூப்பர் பாஸ்பேட்டில் அடங்கியுள்ள தனிமச்சத்துக்களான போரான், குளோரின் மற்றும் சோடியம் போன்றவை தென்னை மரத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கின்றன.

எனவே, மேற்கூறியுள்ள சத்துக்கள் அடங்கிய உரங்களை தென்னை மரத்திற்கு இடுவதன் மூலம் தென்னை மரம் அதிக விளைச்சல் தரும்.

தென்னைமரம் வேகமாக வளர இதை மட்டும் உரமாக கொடுத்தால் போதும்..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement