பசுமையான செம்பருத்தி செடிக்கு
உங்கள் விட்டு தோட்டத்தில் பூத்து குலுங்கும் செம்பருத்தி செடியை பார்க்க எவ்வளவு அழகா இருக்கும். நம்மில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் செம்பருத்தி செடி இருக்கும். செம்பருத்தி செடியில் ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் எண்ணற்ற பலன்களை நமக்கு தருகிறது. செம்பருத்தியை நாம் வீட்டில் வளர்ப்பதால் ஒரு நல்ல நேர்மறையான அதிர்வலைகளை தரும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த செம்பருத்திச்செடி பூக்கவில்லை என்றால் நமக்கு எவ்வளவு கவலையாக இருக்கும். அந்த செம்பருத்தி செடியை பூக்க வைக்க நாம் பல முயற்சிகள் எடுத்திருப்போம். சந்தையில் கிடைக்கும் அனைத்து வகையான உரங்களையும் பயன்படுத்திருப்போம். ஆனால் அதன் பலன் பூஜ்ஜியமாக தான் இருக்கும். இந்த பதிவில் ரூபாய் செலவில்லாமல் உங்கள் வீட்டில் உள்ள பொருட்ட்களை கொண்டே செம்பருத்தி செடியை செழிமையாக வளரவைக்கலாம். வாருங்கள் அது எப்படி என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்…
செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க வீட்டு உரம்:
-
தேயிலை தூள்:
ஒரு பாத்திரத்தில், அரை கப் (500 மிலி ) தண்ணீர் கொண்டு அதனுடன் 2 தேக்கரண்டி தேயிலை தூளை சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது தேயிலை கலந்த தண்ணீரை சற்று கொதிக்க விடவும்.
பிறகு அந்த தண்ணீரை நன்றாக குளிரவிட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி செடிகளில் விடவும். மஞ்சளில் உள்ள நோய் எதிப்பு சக்தி உங்கள் தாவரத்தை எறும்பு போன்ற பூச்சிகளிடம் இருந்தும் உங்கள் செம்பருத்தி செடியை தாக்கும் நோய்களிடம் இருந்து காக்கும்.
how to get more flowers hibiscus plant homemade fertiliser in tamil:
2. வெந்தயம்
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தை தூளாக்கி அதனை உங்கள் செம்பருத்தி செடியின் வேர்ப்பகுதியில் மண்ணுடன் நன்கு கலந்து விடவும்.
வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் உங்கள் செம்பருத்தி செடியை நன்கு பூக்க வைக்கும்.
செம்பருத்தி நன்கு செழிமையாக வளர போதுமான அளவு தண்ணீர் தேவை. ஆனாலும், தேவைக்கு அதிகமான தண்ணீரோ அல்லது குறைவான தண்ணீரோ அந்த செடிக்கு செல்வதால் செம்பருத்தி செடியின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கும்.
உங்கள் செம்பருத்தி செடிக்கு பொட்டாசியம் சத்தக் கொஞ்சம் அதிகமாக கொடுக்க வேண்டும் அதனால் பூக்களில் உற்பத்தி அதிகரிக்கும்.
பூக்காத ரோஜா செடியிலும் அதிக பூக்கள் பூத்து குலுங்க ஒரே 1 கிளாஸ் இதை ஊற்றுங்கள் போதும்
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |