வெல்லம் ஒன்று போதும்..! ஒரே ஒரு செம்பருத்தி செடியிலும் 100 பூக்கள் பூக்கும்..!

Advertisement

Hibiscus Fertilizer Homemade in Tamil

அனைத்து வீடுகளிலும் செம்பருத்தி செடி வளர்த்து வருவோம். செம்பருத்தி செடி  அழகிற்காக மட்டுமில்லாமல் அதில் எண்ணற்ற பயன்களும் உள்ளது. அதாவது, செம்பருத்தி இலையம் பூவும் நம் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. எனவே இந்த செடியை நாம் அதிகமாக வீடுகளில் வளர்த்து வருவோம். ஆனால் சில செடிகள் வைத்து அதிக நாட்கள் ஆகியும் பூக்காமல் இருக்கும். அப்படி இருக்கும் செம்பருத்தி செடிகளை பூக்க வைப்பதற்கு நம் சில பொருட்களை உரமாக கொடுக்க வேண்டும். அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hibiscus Fertilizer Homemade in Tamil:

Hibiscus Fertilizer Homemade in Tamil

தேவையான பொருட்கள்:

  • வாழை பூ மடல் – 4
  • வெல்லம் – 50 கிராம் 
  • டீ தூள் – 1 ஸ்பூன்  
  • காஃபி தூள் – 1 ஸ்பூன் 
  • வாழைப்பழ தோல் – 6

கருவேப்பிலை செடி மரமாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..

How To Get More Flowers in Hibiscus Plant in Tamil:

செம்பருத்தி செடியை நடவு செய்யும்போது அதற்கு அடியுரமாக தொழுஉரம் கலந்த மண்கலவையை இட வேண்டும். ஏனென்றால் செடி வைக்கும்போது நாம் கொடுக்கும் ஊட்டசத்தினை பொறுத்துதான் செடி நன்கு வளர தொடங்கும்.

அதன் பிறகு, செடி நன்றாக வளர்ந்தும் பூ பூக்கவில்லை என்ற பட்சத்தில் அதற்கு தேவையான உரத்தினை கொடுக்க வேண்டும். எனவே பூக்க அதிக பூக்க என்ன செய்ய வேண்டும் என்று பின்வருமாறு பார்க்கலாம்.

 fertilizer for hibiscus plant in tamil

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் வாழைப்பூ மடல், 1 ஸ்பூன் டீ தூள், 1 ஸ்பூன் காஃபி தூள் மற்றும் வாழைப்பழத் தோல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து இதனை நன்றாக மூடி 4 நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள். 4 நாட்கள் கழித்து இந்த தண்ணீரை வடிகட்டி செம்பருத்தி செடிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் செம்பருத்தி செடி அதிகமாக பூக்க தொடங்கும்.

இவ்வாறு நீங்கள் செய்து வருவதன் மூலம் பூக்காத செம்பருத்தி செடியிலும் அதிக மொட்டுகள் வைத்து பூக்க தொடங்கும்.

கருவேப்பிலை ஒன்று போதும்..! எந்த பூச்செடியாக இருந்தாலும் கிலோக்கணக்கில் பூக்கள் பூத்து குலுங்கும்..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement