ஒரே ஒரு மல்லிகை செடியிலும் 5 கிலோ வரை மொட்டுக்கள் வைக்க இந்த உரத்தை மட்டும் கொடுங்கள்..!

Advertisement

Best Fertilizer For Jasmine Plant in Tamil

பூக்களிலேயே அனைவரும் விரும்பி வைக்கக்கூடியது மல்லிகை பூ தான். அந்த அளவிற்கு மல்லிகை பூ அதிக மணம் கொண்டது. இதனாலே இதனுடைய விலையும் மற்ற பூக்களை விட சற்று அதிகமாகவே இருக்கும். எனவே எப்போதும் மல்லிகை பூவை அதிக விலை கொடுத்தே வாங்க முடியாது என்பதற்காக பெரும்பாலான வீடுகளில் மல்லிகை பூ செடிகளை வாங்கி வந்து நட்டு வைப்போம். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக மல்லிகை செடி பூக்க தொடங்காது.. அதாவது ஒரு சில செடிகள் வளர்ந்து கொண்டே இருக்கும் ஆனால் மொட்டுகளே வைக்காது. அப்படி இருக்கும் செடிக்கு நாம் முடக்கியமாக ஒரு உரத்தினை கொடுக்க வேண்டும். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

How To Get More Blooms on Jasmine in Tamil:

 மல்லிகை பூ அதிகமாக பூக்க

முதலில் மல்லிகை செடியை நல்ல நீர்வளம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.அப்போது தான் நன்கு செழித்து வளர தொடங்கும்.

அதன் பிறகு, மாட்டு எருது, ஆட்டு எருது, மண்புழு உரம் போன்ற உரங்களை மாதத்திற்கு இரண்டு முறை இட வேண்டும்.

உரம் இட்ட பிறகும் மல்லிகை செடி பூக்கள் வைக்காமலே இருந்தால் அதனை கவாத்து செய்து விடல் வேண்டும்.

மேலும், பூச்சு தாக்குதல் ஏதும் இருப்பின், அதற்கு 20 மிலி வேப்ப எண்ணெய்யை எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மல்லிகை செடியில் அதிக மொட்டுக்கள் வைக்க என்ன செய்ய வேண்டும்.?

1 டம்ளர் புளித்த மோர் மற்றும் 1 டம்ளர் தேங்காய் பால் எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி மூடி 6 நாட்கள் வரை அப்படியே வைத்து விட வேண்டும். இதனை தேமோர் கரைசல் என்பார்கள்.

இந்த 6 நாட்களில் ஒவ்வொரு நாளும் இதனை எடுத்து லேசாக குலுக்கி விட வேண்டும்.

அதன் பிறகு 7 -வது நாளில் இந்த கரைசலை எடுத்து 1:9 என்ற அளவில் கலந்து கொள்ள வேண்டும். அதாவது, 1 டம்ளர் தேமோர் கரைசல் எடுத்து கொள்கிறீர்கள் என்றால் 9 டம்ளர் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்.

இதனை நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி மல்லிகை செடியில் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூக்க தொடங்கும்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement