How to get more flowers in rose plant in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு அருமையான விவசாயம் சார்ந்த டிப்ஸை பற்றி தான். பொதுவாக பெரும்பாலானவர்கள் வீட்டில் ரோஸ் செடி வளர்ப்பதற்கு விரும்புவார்கள். இருப்பினும் அந்த ரோஸ் செடி கொஞ்ச நாட்களிலேயே காய்ந்து அல்லது அழுகி போய்விடும். ஒவ்வொரு பூ செடிக்கும் ஒவ்வொரு வகையான பராமரிப்பு முறை என்று ஒன்று இருக்கிறது. அந்த வகையில் ரோஸ் செடிகளுக்கு ஒரு வகையான பராமரிப்பு முறை உள்ளது. அதனை நாம் செய்தாலே போதும் நமது வீட்டில் வளர்க்கும் அனைத்து ரோஸ் செடியிலும் பூ பூத்து குலுங்கும் அந்த பூக்களை பறிப்பதற்கு தான் கை பத்தாது.
பராமரிக்கும் முறை:
ரோஸ் செடி வாங்கிய உடனேயே நீங்கள் அதற்கு சரியான மண் கலவையை கொடுக்க வேண்டும். உங்களுக்கு மண் கலவை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
👉 ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா? அப்போ இதை Try பண்ணுங்க..! 👈
ரோஸ் செடிகளை சூரிய ஒளி விழும் இடத்தில் தான் வைத்து வளர வேண்டும். அதேபோல் ரோஸ் செடிக்கு காலை நேரங்களில் மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
ரோஸ் செடி நன்கு பூத்து குலுங்க ஐந்து வாழைப்பழத்தின் தோலை தனியாக எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு அவற்றில் தண்ணீர் ஊற்றி மூடி போடவும். பின் தினமும் ஒரு முறை இந்த வாழைப்பழ தோலை கிளறிவிடவும், இவ்வாறு ஒருவாரம் வரை செய்து வாருங்கள், ஒருவாரம் கழித்து அதனை வடிகட்டி உங்கள் பூச்செடிகளை தேவைப்படும் அளவு அவற்றில் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும். பின் மூன்று முட்டையின் ஓட்டை மிக்சியில் சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்து அந்த தண்ணீரில் கலந்துகொள்ளவும்.
இந்த கலவையை ரோஸ் செடிகளுக்கு ஊற்றும் போது செடி நன்கு போஷாக்குடன் வளருவதுடன் தினமும் பூக்கள் புது குளிங்கிக்கொண்டே இருக்கும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம் |