1 கப் தேங்காய் பால் போதும் மாதுளை செடியில் உள்ள பிஞ்சிகள் அனைத்தும் காய்களாக மாற..!

Advertisement

How to Get more Fruit From Pomegranate Tree in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதாவது அனைவருமே தங்களுக்கு தேவையான அனைத்து வகையான செடிகளையும் தங்களது வீட்டில் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.  அதிலும் குறிப்பாக மாதுளைப்பழ மரத்தை பலர் தங்களது வீட்டில் வளர்க்கிறார்கள். ஏனென்றால், அதில் அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. அதாவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, உடல் எடை குறைய மாதுளைப்பழ உதவுகின்றது. சிலரது வீட்டில் நீண்ட நாட்களாக மாதுளைப்பழ மரம் இருக்கும். ஆனால் மாதுளைப்பழம் அதிகமாக காய்த்திருக்காது. இன்னும் ஒரு சிலரது வீட்டில் பூக்கள் அதிகமாக பூக்கும் ஆனால் காய்களே காய்திருக்காது. இப்படி உங்க வீட்டில் உள்ள மாதுளைப்பழ மரத்திலேயும் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் மாதுளைப்பழ மரத்தில் அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

ஒரே ஒரு கிளாஸ் மட்டும் இதை ஊற்றுங்கள் குச்சியாக இருந்த ரோஜா செடியும் பூத்து குலுங்கும்

Homemade Fertilizer for Pomegranate Tree in Tamil:

Pomegranate plant growing tips in tamil

இயற்கையான முறையில் உங்க வீட்டில் இருக்கும் மாதுளைப்பழ மரத்தில் அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முதலில் இந்த குறிப்பிற்கு தேவியன் பொருட்களை பார்க்கலாம் வாங்க.

  1. புளித்த மோர் – 1 கப் 
  2. தேங்காய் பால் – 1 கப் 
  3. பெருங்காயத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  4. கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு 
  5. வேப்பம் புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு 
  6. வேப்ப எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  7. தண்ணீர் – 4 லிட்டர் 

ஒரே ஒரு வாழைக்காய் போதும் பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் புளித்த மோர், 1 கப் தேங்காய் பால் மற்றும் 4 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள், 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு, 1 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதனை ஒரு வாரம் அப்படியே விடுங்கள். பிறகு இதனுடன் 5 மடங்கு தண்ணீரை கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் வீட்டின் மாதுளை மரத்துக்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஊற்றுங்கள். அதன் பிறகு பாருங்கள் நீண்ட நாட்களாக காய்க்காமல் இருந்த மாதுளை மரம் கூட கொத்து கொத்தாக காய்க்கும்.

பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

Advertisement